டான் படம் பார்த்து கண்ணீர் விட்ட ரஜினிகாந்த்...மனதை தொட்ட அந்த காட்சி கேட்டு? நெகிழ்ந்து போன சிவகார்த்திகேயன்

First Published May 19, 2022, 4:56 PM IST

Superstar Rajinikanth wishes Sivakarthikeyan after watching Don: சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ள டான் திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் இன்று பார்த்துள்ளார்.

sivakarthikeyan

டாக்டர் படத்திற்கு பிறகு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் அண்மையில் திரையில் வெளியான திரைப்படம் டான்.இந்த படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார். இதில், சிவகார்த்திகேயனுக்கு ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

sivakarthikeyan

சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரடக்‌ஷன்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்த இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.  

sivakarthikeyan

இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தற்போது வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.  உலகம் முழுவதும் 50 கோடி வசூலை 3 நாட்களில் கடந்து விட்டது டான் படம். முதல் வாரத்திலேயே 50 கோடிகளை நெருங்கி வருவதால் படக்குழு செம குஷியாகி உள்ளனர். படத்தின் வெற்றியை டான் படக்குழுவினர் பெரிய சைஸ் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

sivakarthikeyan

இந்நிலையில்,  டான் படத்தை பார்த்த ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை போனில் அழைத்து பாராட்டியுள்ளார். அதில், அவர் படம் சூப்பர், நல்ல நடிப்பு...கடைசி 30 நிமிடங்கள் என்னால் கண்ணீரை அடக்க  முடியவில்லை,  தந்தை மகன் இடையில் நடக்கும் உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் அழுததாக தழுதழத்த குரலில் கூறியுள்ளார். இது தொடர்பான தகவலை, ஆங்கில சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

 மேலும் படிக்க....KRK movie OTT: மே 27ம் தேதி KRK படம் ஓடிடியில் ரிலீஸ்..ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நயன்தாரா,விக்னேஷ் சிவன்

click me!