நீதா அம்பானி, இஷா அம்பானியின் மேக்கப் ஆர்டிஸ்ட் இவர் தான்.. அவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

First Published Apr 30, 2024, 3:05 PM IST

நீதா அம்பானி, இஷா அம்பானியின் மேக்கப் ஆர்டிஸ்ட் எவ்வளவு சம்பளம் வாங்குகிறா தெரியுமா? 

அம்பானி வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அல்லது பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, நீதா அம்பானி மற்றும் அவரது மகள் இஷா, மருமகள் ஸ்லோகா ஆகியோர் தங்கள் அசத்தலான தோற்றத்திற்காக அறியப்பட்டவர்கள். ஆனால் அவர்களின் வசீகர தோற்றத்திற்கான பெருமை பிரபல ஒப்பனை கலைஞரான மிக்கி காண்ட்ராக்டரையே சேரும்.

கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால அனுபவத்துடன், மிக்கி கான்ட்ராக்டர் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான மற்றும் விரும்பப்படும் ஒப்பனை கலைஞர்களில் ஒருவராக நற்பெயரைப் பெற்றுள்ளார்.

மிக்கியின் பாலிவுட் பயணம் 1992இல் கஜோலின் முதல் படமான "பெகுடி" படத்தில் இருந்து தொடங்கியது. பின்னர் பாலிவுட்ட்னின் எண்ணற்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் மிக்கி பணியாற்றி உள்ளார். 

அம்பானி வீட்டு பெண்களான நீதா அம்பானி, இஷா அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா ஆகியோருக்கும் மிக்கி தான் ஒப்பனை கலைஞர். அவர் ஒரு அமர்வுக்கு ரூ. 75,000 முதல் ரூ. 1 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது, இதனால் அவரை இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஒப்பனை கலைஞர்களில் ஒருவராக உள்ளார்.

தீபிகா படுகோன், கரீனா கபூர் கான், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா மற்றும் கஜோல் என பாலிவுட் நடிகைகள் மிக்கியின் வாடிக்கையாளர்கள் ஆவர்.

"ஹம் ஆப்கே ஹை கோன்", "தில் தோ பாகல் ஹை", "குச் குச் ஹோதா ஹை", "கல் ஹோ நா ஹோ," மற்றும் "மை நேம் இஸ் கான்" போன்ற பாலிவுட் கிளாசிக் பாடல்களில் மிக்கியின் மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகள் சிலவற்றைக் காணலாம். 

click me!