உங்கள் துணையுடன் சண்டையிட்டால் கூட உங்கள் உறவு ஆரோக்கியமாக உள்ளது என்பதை குறிக்கும் அறிகுறிகள்..

First Published Mar 28, 2024, 4:35 PM IST

உங்கள் துணை உடன் சண்டையிட்டால் கூட உங்கள் உறவு ஆரோக்கியமாக உள்ளது என்பதை குறிக்கும் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்..

திருமண உறவின் ஆரம்பக் கட்டத்தில் மகிழ்ச்சியும் ஆர்வமும் அதிகமாக இருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல உறவில் ஒரு வித சலிப்பு ஏற்படும். இதனால் தம்பதிகளிடையே மோதல் பிரச்சனை உருவாகலாம்.. ஆனால் நீங்கள் அடிக்கடி உங்கள் துணை உடன் சண்டையிட்டால் கூட உங்கள் உறவு ஆரோக்கியமாக உள்ளது என்பதை குறிக்கும் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்..

How to Build Relationship

ஆரோக்கியமான திருமண உறவில் உங்கள் துணையின்  உள் உலகத்தைப் பற்றியும், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறியவும் உங்களுக்கு ஆர்வம் இருக்கும். மேலும் அவர்களின் உலகில் நீங்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அது ஆரோக்கிய உறவில் இருப்பதற்கான அறிகுறியாகும்.

Can you understand someone else's feelings easily

குழந்தைப் பருவத்தில் நாம் எவ்வாறு வளர்க்கப்படுகிறோம் மற்றும் பெரியவர்களாகிய நமது உறவுகளைப் பாதிக்கும் என்பதன் அடிப்படையில் உங்கள் துணை உடனான பிணைப்பு உருவாகும் என நம்பப்படுகிறது. பாதுகாப்பான இணைப்பு என்பது உங்கள் தேவைகளையும், எல்லைகளையும் தெளிவாகத் தெரிவிக்க உதவும்,

ஆரோக்கியமான உறவில் தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை எப்படி கையாளுகின்றனர் என்பது தான் முக்கியது. இந்த தம்பதிகள் சண்டை போட தயங்க மாட்டார்கள். கருத்து வேறுபாடுகளை நேருக்கு நேர் எதிர்கொள்வார்கள். மோதல்கள் மூலம் தங்கள் உறவை மேலும் வலுவாக்க விரும்புவார்கள்.  மேலும் ஒரு தீர்வு அல்லது சமரசம் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முயல்வார்கள். ஆரோக்கியமான உறவில் தம்பதிகள் ஒருவரையொருவர் எதிரிகளாகக் கருதுவதில்லை, மேலும் தங்கள் பிரச்சனைகளை பேசி தீர்க்காமல் அப்படியே புறக்கணிக்க மாட்டார்கள். தீர்க்கப்படாத பிரச்சனைகள் காலப்போக்கிய விரிசலுக்கு வழிவகுக்கும்.

ஆரோக்கியமான தம்பதிகள் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்வதற்காக பரஸ்பரம் வெளிப்படையான நேர்மையான கேள்விகளை கேட்பார்கள். இதில் பரஸ்பர ஆதரவு முக்கியமானது என்றாலும், உங்கள் கூட்டாண்மைக்கு வெளியே நீங்கள் இன்னும் ஒரு அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, உங்கள் உறவில் கடினமான காலகட்டத்தை நீங்கள் சந்திக்கிறீர்கள் என்றால், அதற்கு வெளியே ஒரு வலுவான சுய உணர்வு இருப்பது உங்களைப் பெரிதும் பாதிக்காமல் தடுக்கிறது.

ஒன்றாக ஒரு வாழ்க்கையை கட்டியெழுப்ப நம்பிக்கையே முக்கியமாகும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கை வைத்திருப்பது அவசிய. உங்கள் துணை உங்களுக்காக தொடர்ந்து இருப்பார் என்று நம்புவது அவசியம். உங்கள் வாழ்வில் நீங்கள் மிகவும் சுதந்திரமாகவும் நெகிழ்வாகவும் செல்லலாம், அந்த முக்கிய பாதுகாப்பு உணர்வு இல்லாமல், ஒரு உறவு ஆரோக்கியமாக இருக்க முடியாது. சந்தோஷமான நேரங்கள் மட்டுமின்றி மோசமான நேரங்களிலும் உங்கள் துணைக்கு ஆதரவாக நீங்கள் நிற்கும் போது உங்கள் உறவு மேலும் வலுவாகும்.

click me!