அண்ணன் என நம்பி வந்த சிறுமி; மனநலம் பாதித்தவர் என்றும் பாராமல் காமுகன்கள் செய்த கொடூர செயல்

First Published | May 9, 2024, 11:07 AM IST

விருதுநகரில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்த நிலையில், மேலும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் காரியபட்டி அருகே உள்ள கிராமத்தில் சிறுமி ஒருவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தனது உறவினர்களின் பராமரிப்பில் இருந்து வருகிறார். சிறுமி வெளியூரில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் மீண்டும் தனது உறவினர் வீட்டிற்கே வந்துள்ளார்.

சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமி இயற்கை உபாதைகளுக்காக வெளியில் சென்ற நிலையில், நீண்ட நேரம் கழித்தே மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமியின் ஆடைகள் சற்று அலங்கோலமாகவும், உடல் முழுவதும் புழுதி படிந்த நிலையிலும் வந்ததை உறவினர்கள் கவனித்துள்ளனர்.

Tap to resize

பின்னர் இது தொடர்பாக சிறுமியிடம் உறவினர்கள் கேட்டபோது பக்கத்து வீட்டில் உள்ள முருகன் அண்ணா எனக்கு ஜூஸ், கடலை மிட்டாய் வாங்கி கொடுத்து சாப்பிட சொன்னார். நான் சாப்பிட்டு முடித்ததும், அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் இதே போன்று அவர் வீட்டிற்கு அடிக்கடி வரும் அவரது நண்பர்களான பாண்டியராஜ், தேவராஜ், ஜவஹர் ஆகியோரும் என்னை இதுபோல் அடிக்கடி செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

சிறுமி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக முருகனின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இவர்கள் வருவதை பார்த்த முருகேசன் வீட்டில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பாண்டியராஜ், முருகன், ஜவஹர் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள தேவராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

Latest Videos

click me!