Shruti Haasan: லவ் பிரேக்கப் சர்ச்சைக்கு நடுவே... ரணகள கவர்ச்சியில் ஹாட் போட்டோசை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்!

First Published Apr 26, 2024, 7:19 PM IST

நடிகை ஸ்ருதி ஹாசன் தன்னுடைய காதலர் சாந்தனுவை பிரேக்கப் செய்து விட்டதாக ஒரு தகவல் தீயாக பரவி வரும் நிலையில், எதையும் கண்டு கொள்ளாமல் ஸ்ருதி செம்ம ஹாட் போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.
 

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன், தன்னுடைய 3 வயதிலேயே... தந்தை கமல் நடித்த தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர்.

இந்த படத்தில் நடித்தது மட்டும் இன்றி, போற்றி பாடடி பெண்ணே என்கிற பாடலையும் பாடி இருந்தார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், பின்னணி பாடலையும் பாடிய ஸ்ருதி, தன்னுடைய கல்லூரி படிப்பை படித்து முடிந்த பின்னர் இசையில் கவனம் செலுத்த விரும்பினார்.

10 வருட தவம்.. 2 அபார்ஷன்! 42 வயதில் கர்ப்பமாக உள்ளதை அறிவித்த சீரியல் நடிகை ஜூலி! குவியும் ரசிகர்கள் வாழ்த்து

ஆனால் விதி இவரை திரைப்பட நடிகையாக மாற்றியது. பாலிவுட் திரையுலகில் 'லக்கி' என்கிற படத்தில் நடித்த ஸ்ருதி, இதை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க துவங்கினார்.

குறிப்பாக தமிழில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக 7-ஆம் அறிவு படத்தில் ஹீரோயினாக அறிமுமான ஸ்ருதி, இதை தொடர்ந்து 3, புலி, பூஜை, வேதாளம், லாபம், போன்ற பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

ஒரே வருடத்தில் முடிவுக்கு வரும் ஜீ தமிழின் முக்கிய சீரியல்! அட இந்த தொடரா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சமீபத்தில் பான் இந்தியா படமாக, நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில்... ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி, சென்னை ஸ்டோரி என்கிற ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார்.

ஸ்ருதிஹாசன் மைக்கில் கோர்சலே என்பவரை காதலித்து அவரிடம் பிரிந்த பின்னர், மும்பையை சேர்ந்த டூல்டூல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரை கடந்த 2 வருடமாக டேட் செய்து வந்த நிலையில், அவரிடம் இருந்தும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

shs

இந்த தகவல் குறித்து இதுவரை ஸ்ருதி ஹாசன் வெளிப்படையாக எதுவும் கூறாத நிலையில், தற்போது கலக்கலான கவர்ச்சி உடையில்... எடுத்து கொண்ட ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

click me!