Vikram Movie: விக்ரம் வெளியான முதல் நாளில்...லோகேஷ் கனகராஜுக்கு காத்திருத்த அதிர்ச்சி...பரபரப்பு புகார்...

First Published Jun 4, 2022, 9:48 AM IST

Vikram Movie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், சூர்யா, விஜய் சேதுபதி நடிப்பில், நேற்று உலகம் முழுவதும் வெளியான விக்ரம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Kamal Haasan Vikram

கைதி, மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் விக்ரம் படம் நேற்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பிரமாண்டமாக ரிலீசானது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து, விஜய்சேதுபதி, பக்த் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், சிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும்,  இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

Kamal Haasan Vikram

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். உலகமெங்கும் 5 அயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்கிலும், தமிழகத்தில் மட்டும் 800க்கும் அதிகமான தியேட்டர்களில் படம் ரிலீசாகி உள்ளது. 

Kamal Haasan Vikram

அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக வெளியாகி இருக்கும் விக்ரம் படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கமல், சூர்யா, விஜய்சேதுபதி நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி திரைப்படமும் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் செம மாஸாக இருக்க, ரசிகர்களை படத்தை திரையரங்கில் கொண்டாடி வருகின்றனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ரிலீசான முதல் நாளில் உலகம் முழுவதும் 35 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாம். மேலும், விக்ரம் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து, வெளிவந்த வண்ணம் உள்ளது. 

Kamal Haasan Vikram

இந்நிலையில், டெலி கிராம் மற்றும் இணையத்தில் விக்ரம் படம் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.  இதனையடுத்து, பைரஸி இணையதளங்களில் படம் வெளியாவதை தடுக்க லோகேஷ் கனகராஜ் சார்பில் தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க....Vikram: ஒரே வாரத்தில் ரூ 150 கோடி குவிக்கும் விக்ரம்....அஜித், விஜய் எல்லாம் ஓரம் போ,வெளியான முக்கிய தகவல்...

click me!