Indian 2 Second Single : நெருங்கும் ஆடியோ லாஞ்ச்... இந்தியன் 2 படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

First Published May 27, 2024, 12:31 PM IST

ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

Indian 2

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த படம் இந்தியன். தற்போது 28 ஆண்டுகள் கழித்து அப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ஷங்கர் இயக்கி உள்ளார். இதில் கமல்ஹாசன் உடன் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Kamalhaasan

இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இயக்குனர் ஷங்கர் படத்துக்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதன்முறை ஆகும். இதற்கு முன்னர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இரண்டு இசையமைப்பாளர்களுடன் மட்டுமே பணியாற்றிய இயக்குனர் ஷங்கர், அனிருத் உடன் முதன்முறையாக இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இதையும் படியுங்கள்... Indian : இந்தியன் 2-வுக்கு முன் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் ஆகும் இந்தியன் முதல் பாகம் - அதுவும் இந்த தேதியிலா?

kamal, shankar

இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் அப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான பாரா என்கிற பாடல் வெளியிடப்பட்டது. அப்பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அப்படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்டு உள்ளனர்.

Indian 2 second Single

அந்த வகையில் இந்தியன் 2 திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வருகிற மே 29-ந் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் இடையேயான ரொமாண்டிக் பாடல் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி வருகிற ஜூன் 1-ந் தேதி இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட ஆடியோ லாஞ்ச் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... Indian 2 : அட்ரா சக்க.. இந்தியன் 2 படத்தின் கதை இதுதானா? பக்கா பிளானில் ஷங்கர் - வெளியான சுவாரசிய அப்டேட்!

Latest Videos

click me!