கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்தவர்களில் இதுவரை 5 பெண்கள் உட்பட 63 பேர் உயிரிழந்துள்ளனர். 74 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரத் (52) என்பவர் புதன்கிழமை உயிரிழந்தை அடுத்து பலி எண்ணிகை அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் கள்ளச் சாராயம் குடித்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 74 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 88 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 க்கும் மேற்பட்டவர்கள் கண் பார்வையை முழுமையாக இழந்திருக்கிறார்கள்.
இதுவரை 5 பெண்கள் உட்பட 63 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 32 பேரும், சேலம் மருத்துவமனையில் 21 பேரும், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் தலா 4 பேரும் உயிரிழந்து உள்ளனர். சிகிச்சையின் உள்ளவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கின்றனர்.
கண் பாதுகாப்புக்கு கேரண்டி கொடுக்கும் தரமான ஸ்மார்ட்போன்! எப்படி இருக்கு Moto S50 Neo?