நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் மயங்கி விழுந்த 6ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்(வயது 47). அப்பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவரது மகள் புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தனிஷ்கா(11) 6ம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில் மாணவி வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு சென்ற நிலையில் மாணவி திடீரென பள்ளியில் மயக்கம் அடைந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
கொடைக்கானலில் போக்குவரத்து மின்கம்பம் சரிந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி, ஒருவர் படுகாயம்
undefined
இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள வடுகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் மாணவிக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராசிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ராசிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள் பரிசோதித்த போது மாணவி தனிஷ்கா உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
காவல் நிலையம் அருகில் கள்ளச்சாராயம் குடித்த பெண்கள்; என்ன செய்தீர்கள்? போலீசை அலறவிட்ட குஷ்பு
மாணவி இறந்த துக்கம் தாங்காமல் மருத்துவமனையில் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மாணவி தனிஷ்காவிற்கு சிறு வயதில் இருந்தே இதய கோளாறு காரணமாக ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தகாக மாணவியின் உறவினர் தெரிவித்துள்ளார்.