Dindigul: கொடைக்கானலில் போக்குவரத்து மின்கம்பம் சரிந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி, ஒருவர் படுகாயம்
கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து மின்கம்பம் முறிந்து விழுந்ததில் தாஸ் என்ற கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார், ஒருவர் படுகாயம் அடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதலே கொடைக்கானல் நகர் பகுதியில் ஆன பாம்பார்புரம், அப்சர்வேட்டரி, ஏரி சாலை, செண்பகனூர் மட்டுமின்றி கிராம பகுதிகளான மன்னவனூர் பூம்பாறை வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பலத்த காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது.
மலைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
இதன் காரணமாக ஆங்காங்கே மர கிளைகளும் சாய்ந்து வருகின்றன. இந்த சூழலில் கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து குறியீடு மின் கம்பம் பலத்த காற்றின் காரணமாக சாய்ந்தது. இதில் சாலையில் சென்ற இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்டு அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு முதல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காவல் நிலையம் அருகில் கள்ளச்சாராயம் குடித்த பெண்கள்; என்ன செய்தீர்கள்? போலீசை அலறவிட்ட குஷ்பு
இதனிடையே மின் கம்பம் சரிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த சுமை தூக்கும் கூலி தொழிலாளியான தாஸ் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரழந்தார். மற்றொரு நபர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பங்கள் மட்டும் இன்றி ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.