நாமக்கல்லில் வலிப்பு வந்ததுபோல் நடித்து வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்த இரு இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் கோட்டை தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் நவீன் (வயது 31). லாரி பட்டறையில் வேலை செய்து வருகிறார். நவீன் சென்னை சென்ற போது அங்கு நண்பரான மாரியை (25) நாமக்கல்லில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு நாமக்கல் மோகனூர் சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு மாரிக்கு வலிப்பு வந்தது போல் நடித்துள்ளனர்.
Narayanasamy: புதிதாக பதவி ஏற்கவுள்ள ஆட்சி குறைபிரசவ ஆட்சியாக தான் அமையும் - நாராயணசாமி கணிப்பு
அப்போது சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்னார் (31) இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சாலையில் இருவரையும் பார்த்த பொன்னர் வண்டியை நிறுத்தி உதவ முன் வந்த போது அவரை மிரட்டி செல்போன், ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் நவீனும், மாரியும் சென்றுள்ளனர்.
சிறிது தூரம் சென்றவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். இச்சம்பவத்தில் மாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நவீன் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து நாமக்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.