சிக்கன் ரைஸை வீட்டிலிருந்த அவரது தாய் நித்யா மற்றும் தாத்தா சண்முகம் (67) உட்பட குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் நதியா மற்றும் தாத்தா சண்முகம் ஆகியோருக்கு மட்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
நாமக்கல்லில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்ட சண்முகநாதன்(72) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது பேரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் ஜீவானந்தம் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை இரவு 8 மணியளவில் எருமபட்டி அருகே தேவராயபுரத்தை சேர்ந்த பகவதி(20) என்ற கல்லூரி மாணவர் ஹோட்டலில் அங்கேயே சாப்பிட்டு விட்டு ஏழு சிக்கன் ரைஸ் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
undefined
இதையும் படிங்க: 55 வயது மாமியாரை மடக்கிய மருமகன்! திருமணம் செய்து கொண்டதால் மாமனார் அதிர்ச்சி! நடந்தது என்ன?
பின்னர் அந்த சிக்கன் ரைஸை வீட்டிலிருந்த அவரது தாய் நித்யா மற்றும் தாத்தா சண்முகம் (67) உட்பட குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் நதியா மற்றும் தாத்தா சண்முகம் ஆகியோருக்கு மட்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்தத குடும்பத்தினர் இருவரையும் மீட்டு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் உமா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அந்த உணவகத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவு தயாரிக்கும் இடம் தூய்மையாக இல்லாத காரணத்தால், ஆட்சியர் உடனடியாக அந்த உணவகத்திற்கு பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும், உணவு மாதிரிகளைச் சேகரித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அதை சோதனை செய்வதற்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 40க்கும் 21க்கும் கள்ளத்தொடர்பு! உல்லாசத்துக்கு தந்தை இடையூறு! சத்தமே இல்லாமல் கதையை முடித்து நாடகமாடிய மகள்!
இதில் இரண்டு சிக்கன் ரைஸ் பொட்டலத்தில் மட்டும் பூச்சி மருந்து கலந்து இருந்ததாகவும், அதனால் இருவருக்கும் உடல்நலன் குறைவு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சராசரியாக நேற்று மட்டும் அந்த உணவகத்தில் 70 முதல் 80 சிக்கன் ரைஸ் விற்பனையான நிலையில், மற்றவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனிடையே நேற்று இரவு சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், உணவு பொட்டலத்தை வாங்கிச் சென்ற கல்லூரி மாணவர் பகவதியிடம் நாமக்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் பழக்க வழக்கங்களை தட்டிக்கேட்டதால் சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.