நாமக்கல் ஓட்டலில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலி!

By SG Balan  |  First Published May 2, 2024, 11:44 PM IST

உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் சாப்பிட்ட சிக்கன் ரைஸை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்கு அனுப்பினர். சோதனையில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதாக தெரியவந்துள்ளது.


நாமக்கல்லில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்த பகவதி பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஓர் உணவகத்தில் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிச் சென்றுள்ளார். ஒரு பார்சலை எருமைப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தில் வசிக்கும் தாத்தா சண்முகநாதனுக்கு தம்பி ஆதியிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.

Latest Videos

undefined

மீதியை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். இரவு 8.30 மணியளவில் பகவதியின் தாய் நதியா சிக்கன் ரைஸ் பார்சலைப் பிரித்துச் சாப்பிட்ட ஆரம்பித்தபோது, அதில் இருந்து வித்தியாசமான வாசனை வருதை உணர்ந்து சாப்பிடாமல் வைத்துவிட்டார். உடனே தன் தந்தைக்கு போன் செய்து விசாரித்துள்ளார். அதற்குள் சண்முகநாதன் அந்த சிக்கன் ரைஸை சாப்பிட்டுவிட்டார்.

சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் நதியாவும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்தனர்.

இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் சாப்பிட்ட சிக்கன் ரைஸை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்கு அனுப்பினர். சோதனையில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அந்த சிக்கன் ரைஸ் வாங்கப்பட்ட ஹோட்டல் மீது பகவதி புகார் அளித்தார். ஹோட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் போலீசார் ஹோட்டல் உரிமையாளர் ஜீவாநந்தனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பகவதியின் தாய் மற்றும் தாத்தா இருவர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இதனால், பகவதியிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.

click me!