Madurai Crime: மதுரையில் இளைஞர் தலை துண்டித்து கொடூர கொலை; மாற்று சமூக பெண்ணை காதலித்ததால் வெறிச்செயல்?

By Velmurugan s  |  First Published Jun 26, 2024, 5:27 PM IST

மாற்று சமூக பெண்ணை காதலித்த தனது மகனை கொடூரமாக கொலை செய் நபர்கள் மீது ஆணவப்படுகொலை என வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இளைஞரின் உறவினர்கள் போராட்டம்.


விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் அம்மன்கோவில் காலனி தெருவைச் சேர்ந்த மாரிமுத்து - மாரியம்மாள் என்பவரின் மகன் அழகேந்திரன் (வயது 21). படித்து முடித்துவிட்டு வேலை தேடிவந்துள்ளார். இதனிடையே அழகேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலினத்தில் மாற்று சமூக பெண் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை அழகேந்திரன் தனது உறவினரான மதுரை கள்ளிக்குடியில் உள்ள அழகர் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அழகேந்திரன் காதலிப்பதாக கூறப்படும் பெண்ணின் உறவினரான பிரபாகரன் என்பவர் அழகேந்திரனின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனியாக பேச வேண்டும் எனக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் தனது மகனை காணவில்லை என அழகேந்திரனின் தாயார் அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற நிலையில், சம்பந்தப்பட்ட  காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டுமென கூறி காவல்துறையினர் கூறியதை அடுத்து கள்ளிக்குடி  காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

11 வயது சிறுமிக்கு இப்படிப்படியும் ஒரு நோயா? அரசு பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்

இதனிடையே இன்று காலை அழகேந்திரன் கள்ளிக்குடி அருகே வேலாம்பூர் கண்மாயில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தாயாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கில் அழகேந்திரனை அழைத்துச்சென்ற பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அழகேந்திரனின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

காவல் நிலையம் அருகில் கள்ளச்சாராயம் குடித்த பெண்கள்; என்ன செய்தீர்கள்? போலீசை அலறவிட்ட குஷ்பு

இந்நிலையில் தனது மகன் காதலிப்பதாக கூறிய பெண்ணின் உறவினர்கள் தனது மகனை ஆணவ படுகொலை செய்து விட்டதாக கூறியும் அழகேந்திரனின் தாயார் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கும் வரை தங்களது போராட்டம் நீடிக்கும் என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

click me!