Madurai Crime: மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 8 மாத பெண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற கொடூரன்

By Velmurugan s  |  First Published Jun 25, 2024, 4:14 PM IST

மதுரை மாவட்டத்தில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் 8 மாத பெண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற தந்தையை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மதுரை மாவட்டம், சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த  நாகசக்திக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதினருக்கு, ஒன்றை வயதில் ஆண் மகனும், 8 மாத பெண் குழந்தையும் இருந்தன.

இந்த நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மனைவி நாகசக்தி இரண்டு குழந்தைகளை அழைத்து கொண்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பு காளியம்மாள் என்ற தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும், மனைவி நாகசக்தி காளியம்மாள் வீட்டில் இருப்பதை அறிந்த  விக்னேஷ் மது போதையில் அங்கு சென்று மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

மனு கொடுத்துவிட்டால் ஆளுநர் ஆட்சியை கலைத்துவிடுவாரா? நாங்கள் சும்மா விடுவோமா? முத்தரசன் ஆவேசம்

தொடர்ந்து, மனைவி நாகசக்தி தனது மகனை தூக்கிக்கொண்டு அடுத்த தெருவில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த 8 மாத மகளை தூக்க சென்றுள்ளார். ஆனால், அதற்குள் சிறுமியை விக்னேஷ் தூக்கி கொண்டு சென்ற போது அருகில் இருந்தவர்கள் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் 8 மாத பச்சிளம் பெண் குழந்தை என்றும் பாராமல் சோழவந்தான் சாலையில் தூக்கி தரையில் வீசியுள்ளார்.

Shocking Video: கவனக்குறைவாக சாலையை கடந்த XL வாகனம்; அசுர வேகத்தில் வந்து அடித்து தூக்கிய தனியார் பேருந்து

இதனால் 8 மாத பெண் குழந்தைக்கு தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அதன் பின்பு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, சோழவந்தான் போலீசார் விக்னேஷை கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

click me!