விசாரணையின் போது மயங்கி விழுந்த மதுரை ஐகோர்ட் நீதிபதி.. டாக்டர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Published : Jun 25, 2024, 12:07 PM ISTUpdated : Jun 25, 2024, 12:25 PM IST
விசாரணையின் போது மயங்கி விழுந்த மதுரை ஐகோர்ட் நீதிபதி.. டாக்டர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சுருக்கம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆதிகேசவலு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனது அறையில் வழக்கம் போல் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஆதிகேசவலு வழக்கு விசாரணையில் போது மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆதிகேசவலு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனது அறையில் வழக்கம் போல் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது தலை வலிப்பதாக கூறிய சிறிது நேரத்தில் நீதிபதி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதற்றம் அடைந்த நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நீதிபதியை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: ஓயாத மரண ஓலம்! பலி எண்ணிகை 60ஆக உயர்வு! தொடரும் கைது நடவடிக்கைகள்! கள்ளக்குறிச்சியை அலறவிடும் சிபிசிஐடி.!

அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். பரிசோதனை முடிவில் தலையில் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நீதிபதி ஆதிகேசவலுவின் குடும்பத்தினர் மற்றும் தற்காலிக தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மதுரை விரைந்தனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!