நடிகர் விஜய் பிறந்தநாள்; மதுரையில் கைவிடப்பட்ட நாய்களுக்கு பிரியாணி விருந்து வைத்த விஜய் ரசிகர்கள்

By Velmurugan s  |  First Published Jun 22, 2024, 2:14 PM IST

நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் விஜய் ரசிகர்கள் ஆதரவற்ற நாய்களுக்கு பிரியாணி விருந்து படைத்து மகிழ்ந்தனர்.


நடிகர் விஜய்யின் 50வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஐ கடந்துள்ள நிலையில் இந்த விவகாரம் தமிழக அளவில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என விஜய் கோரிக்க வைத்தார்.

திருச்சியில் 250 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு; நள்ளிரவில் அதிரடி காட்டிய ஆட்சியர்

Tap to resize

Latest Videos

undefined

அதை ஏற்ற விஜய் ரசிகர்கள் பலர் கொண்டாட்டங்களை தவிர்த்து விட்டு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் மதுரை மாநகர் பகுதியில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சமூகத்தால் கைவிடப்பட்ட நாய்கள் மீட்கப்பட்டு பிபி குலம் பகுதியில் செயல்பட்டு வரும் சிறிய காப்பகத்தில் உள்ள நாய்களுக்கு விருந்து வைக்க திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் கள்ளச்சாராய சாம்ராஜியத்தை அறிமுகப்படுத்தியதே கருணாநிதி தான்; ஹெச்.ராஜா ஆவேசம்

அதன்படி நாய்களுக்கு பிரியாணி செய்ய திட்டமிடப்பட்டு அங்குள்ள ஒருங்கிணைப்பாளர் மூலம் பிரியாணி செய்யப்பட்டு கைவிடப்பட்ட சமூக நாய்களுக்கு விருந்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

click me!