ஷங்கரின் பிரம்மாண்டத்தால் கல்லா கட்டும் கேம் சேஞ்சர்... ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?

First Published Mar 21, 2024, 2:24 PM IST

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை முன்னணி ஓடிடி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

Shankar, Ramcharan

தமிழில் இந்தியன், எந்திரன், அந்நியன், சிவாஜி போன்ற பிரம்மாண்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஷங்கர், முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். அங்கு முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் ராம் சரணை ஹீரோவாக வைத்து அவர் இயக்கி வரும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Game Changer

மேலும் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையை தான் படமாக்கி இருக்கிறார் ஷங்கர். கேம் சேஞ்சர் திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்... Kamalhaasan : தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக்கில் இணைந்தார் கமல்ஹாசன்... ஆனால் நடிகராக அல்ல...!

ram charam Movie Update

சமீபத்தில் நடைபெற்ற அமேசான் ஈவண்ட்டின் மூலம் இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கி இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதுவும் தியேட்டர் ரிலீசுக்கு பிந்தைய ஓடிடி உரிமையை கைப்பற்றி இருப்பதாக அறிவித்துள்ளனர். அத்தோடு கேம் சேஞ்சர் படத்தின் கதையையும் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி, நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அரசியலில் நடக்கும் ஊழலை ஒழிக்க தேர்தலில் நியாயமான முறையில் போட்டியிட்டு எப்படி ஆட்சியை மாற்றியமைக்கிறார் என்பது தான் படத்தின் கதைக்கரு.

Game Changer OTT rights sold

கேம் சேஞ்சர் படத்தின் இந்தி ஓடிடி உரிமை தவிர்த்து மற்ற அனைத்து தென்னிந்திய மொழிகளின் ஓடிடி உரிமையையும் அமேசான் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. அதுவும் எவ்வளவு தெரியுமா சுமார் ரூ.150 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறதாம். சூர்யாவின் கங்குவா படத்தை விட 50 கோடி அதிகம் கொடுத்து கேம் சேஞ்சர் பட ஓடிடி உரிமையை வாங்கி இருக்கிறது அமேசான். இத்தனைக்கு காரணம் ஷங்கரின் பிரம்மாண்டம் தான் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Suriya : சூர்யா இல்ல.. Rolex கேரக்டரில் நடிக்க லோகேஷின் முதல் சாய்ஸாக இருந்த ‘அந்த’ மாஸ் நடிகர் யார் தெரியுமா?

click me!