Tamannah Salary : அரண்மனை 4 படத்திற்காக தமன்னா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

First Published May 9, 2024, 12:42 PM IST

அரண்மனை 4 படத்திற்காக நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 படம் கடந்த மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் தமன்னா, ராஷி கன்னா, கோவை சரளா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் இதுவரை 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

Aranmanai 4

இந்த நிலையில் அரண்மனை 4 படத்திற்காக நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்திற்காக தமன்னாவுக்கு ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே அரண்மனை 4 படத்தில் இடம்பெற்றுள்ள அச்சச்சச்சோ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த பாடலில் தங்கள் அசத்தலான நடனம் மூலம், தமன்னா, ராஷி கன்னா இருவரும் ரசிகர்களின் தங்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர். 

aranmanai 4

மேலும் குஷ்புவும், சிம்ரனும் சேர்ந்து ஆடிய பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பாடல் படமாகக்ப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ குஷ்பு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த சிம்ரன், குஷ்புவின் நடனத்திற்கு பாராட்டு தெரிவித்திருந்தார். அதே போல் குஷ்புவும் சிம்ரனின் நடனத்ட்ஹை பாராட்டி இருந்தார். 

click me!