பெண் காவலரிடம் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? திடீரென நீதிமன்றத்திற்குள் நுழைந்த பெண் காவலர் குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published May 15, 2024, 7:54 PM IST

கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பெண் காவலர்கள் பாதுகாப்பில் சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காவலர்களிடம் செல்போன் நம்பர் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


பெண்காவலர்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்த யூடியூபர் சவுக்கு சங்கரை காவல் துறையினர் தேனியில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மேலும அவரை நேர்காணல் செய்த மற்றொரு யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டும் டெல்லியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் இன்று கோவையில் இருந்து திருச்சி சிறையில் ஆஜர் படுத்துவதற்காக பெண் காவலர்கள் பாதுகாப்போடு வேனில் அழைத்து வரப்பட்டார். நீதிபதி முன்பாக சவுக்கு சங்கர், அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த ஒரு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் வழக்கு தொடர்வது தேவையில்லாத ஒன்று. அதேபோன்று ஒரு வழக்குக்கு பல்வேறு இடங்களில் நீதிமன்றத்தில் ஆஜராகி காவல்துறை விசாரணைக்கு எடுக்கின்றனர்.

Latest Videos

undefined

125 கோடி மதிப்பு . . . பையன் மாதிரி வளத்தோம்; சாப்ட்வேர தூக்கிட்டு ஓடிட்டான் சார் - மதுரையில் பரபரப்பு

ஏற்கனவே நீதிமன்ற காவலில் இருக்கும் போது அவருடைய கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மீண்டும், மீண்டும் காவல்துறை விசாரணைக்கு எடுக்கும் போது அவர் கை எலும்பு  முறிவு ஏற்பட்டது போல் நாளை அவர் கால் எலும்பும் முறியும் சூழல் ஏற்படும். ஒரு விவகாரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் வழக்கு போடுவதை தவிர்க்க வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

அதே போன்று அரசு தரப்பில் காவல்துறை சார்பில் விசாரணைக்கு எடுத்தால் மட்டுமே எதன் அடிப்படையில் அவர் பேசினார், அவரிடம் என்ன முகாந்திரம் உள்ளது என்பது குறித்தான விவரங்கள் வெளியே கொண்டு வர முடியும் என வாதிட்டனர்.

மேலும் பெண் காவலர்கள் நேம் பேட்ச் இல்லாமல் அழைத்து வந்ததும் வேனில் அவரை அடித்ததாக சொல்லப்பட்ட புகாரில் அழைத்து வந்த காவலர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சவுக்கு சங்கர் வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது திடீரென உள்ளே வந்த பெண் காவலர்கள் இப்ப கூட வேனில் வரும்போது உங்கள் அனைவரையும் மீடியாவில் கிழிக்கிறேன் என சவுக்கு சங்கர் மிரட்டியதாக  குற்றம் சாட்டினர். மற்றொரு பெண் காவலர் தன் கல்யாணம் ஆகாத நபராக பணியில் இருக்கிறேன். நான் அவருடன் வேனில் பயணிக்கும்போது, எனது பெயர் மற்றும் எனது போன் நம்பர் கேட்டார். நான் வழங்கி இருந்தால் எனது பெயருக்கும் அவப்பெயர் ஏற்படுத்துவார் என குற்றம் சாட்டினர்.

அரசு சொகுசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கி, அரிவாள்; நெல்லையில் பரபரப்பு

இதனால் நீதிபதி முன்பு பரபரப்பான விவாதம் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைத்தார். மேலும் திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள கிளை சிறையில் சவுக்கு சங்கரை அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சவுக்கு சங்கர்  சிறையில் அடைக்கப்பட்டு நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.

இந்நிலையில் சவுக்குசங்கர் நீதிமன்றத்தை விட்டு காவல்துறையினர் அழைத்து வந்தபோது நீதிமன்ற வாசலில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்குமாறு மற்றும் செருப்புடன் சவுக்குசங்கர் எதிர்த்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

click me!