10 வருட தவம்.. 2 அபார்ஷன்! 42 வயதில் கர்ப்பமாக உள்ளதை அறிவித்த சீரியல் நடிகை ஜூலி! குவியும் ரசிகர்கள் வாழ்த்து

First Published Apr 26, 2024, 6:28 PM IST

பிரபல சீரியல் நடிகை ஜூலி, திருமணம் ஆகி 10 வருடங்களுக்கு பின்னர் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்துள்ளது மட்டும் இன்றி, இந்த 10 வருடம் குழந்தைக்காக ஏங்கியது குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 

சன் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்களில், வில்லியாக நடித்து பிரபலமானவர் ஜூலி. அதே போல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு டான்ஸர் என்பதால், டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜோடி நம்பர் 1, மானாட மயிலாட போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கலக்கியுள்ளார். ஜூலி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர், துணை இயக்குனர் மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் சரியான சீரியல் வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும்... சமீப காலமாக கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி வருகிறார். இவரின் கணவரும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி வரும் நிலையில், விரைவில் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் ஜூலி தெரிவித்துள்ளார்.

ஒரே வருடத்தில் முடிவுக்கு வரும் ஜீ தமிழின் முக்கிய சீரியல்! அட இந்த தொடரா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பொதுவாக சில பிரபலங்கள் திருமணம் ஆன பின்னர் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போடும் நிலையில், ஜூலியோ திருமணம் ஆனதுமே குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார். முதலில் உருவான கரு, அபார்ஷன் ஆகிவிட்ட நிலையில்... இரண்டாவதாக உருவான கரு, கருக்குழாயில் உருவானதால் அதனை கலைக்கும் சூழல் உருவானதாகவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, குழந்தைக்காக பல வருடங்களாக ஜூலியும் அவரின் கணவர் மணிகண்டனும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரு வழியாக தன்னுடைய 42 வயதில் கர்ப்பமாகி உள்ளார் ஜூலி.

ஜூலி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். அண்மையில் தான் அவருக்கு... 5 மாதத்தில் நடக்கும் பூ சூடும் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இந்த தருணத்திற்காக பல வருடங்களாக கார்த்திருந்ததாக கூறிய ஜூலியும் அவரின் கணவர் மணிகண்டனும், குழந்தை இல்லாததால் தாங்கள் பட்ட துயரங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Top 10 Serial TRP: தடாலடியாக சன் டிவி சீரியல்களை TRP-யில் பின்னுக்கு தள்ளி... டாப்புக்கு வந்த விஜய் டிவி தொடர்

எந்த ஒரு விசேஷத்துக்கு சென்றாலும், இன்னும் குழந்தை இல்லையா என பலர் கேட்பார்கள் என்பதால் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்று மணிகண்டன் கூற, ஜூலி தன்னுடைய கணவருக்காக கண்டிப்பாக குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என உறுதியாக இருந்ததாக காதலுடன் பேசியுள்ளார். கணவரின் நண்பர்கள், குழந்தைகளுடன் இருக்கும் போது இவர் மட்டும் தனியாக இருப்பார்.. அது பார்ப்பதற்கே மனதிற்கு வேதனையாக இருக்கும் என தன்னுடைய மன குமுறல்களை கொட்டியுள்ளார்.

அதே போல் பெண்கள் திருமணமானதும் சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். வேலையே இன்று இல்லை என்றால் கூட, வேறு ஒருநாள் செய்து கொள்ளலாம் ஆனால் குழந்தை பேரு அப்படி இல்லை. எனவே வாழ்க்கையின் முக்கியத்துவம் அறிந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார். 42 வயதில் கர்ப்பமாகி உள்ள நடிகை ஜூலிக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Shruti Haasan Breakup: புகைப்படங்களை நீக்கி... சாந்தனுவுடனான பிரேக்கப்பை உறுதி செய்தாரா ஸ்ருதிஹாசன்?

click me!