சில நிமிடங்கள்... படம் பார்க்கிறேன் என்பதையே மறந்து விட்டேன்! புகழ்ந்து தள்ளிய செல்வராகவன்.. நன்றி கூறிய ஹீரோ!

First Published Feb 17, 2024, 9:00 AM IST

இயக்குனர் செல்வராகவன், 'லவ்வர்' படத்தை மெய் மறந்து பார்த்தேன் என கூறி பாராட்டிய நிலையில், இதற்க்கு நடிகர் மணிகண்டன் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.
 

தமிழ் சினிமாவில், எதார்த்தமான காதல் படங்களை கூட, தனக்கே உரிய பாணியில் இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் துவங்கிய அண்ணன்  - தம்பிகளின் பயணம் தற்போது வரை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது. 
 

சமீப காலமாக இயக்குனர் என்பதை தாண்டி, ஒரு நடிகராகவும் செல்வராகவன் பிசியாகி விட்டார். எனவே இவர் இயக்கத்தில் கடைசியாக 'நானே வருவேன்' என்கிற திரைப்படம் தான் வெளியானது.

கட்டப்பா வேடத்தில் டாப் ஸ்டாரை நடிக்க வைக்க ஆசை பட்ட ராஜமௌலி! அவரின் போறாத நேரம்? சத்யராஜுக்கு வந்த வாய்ப்பு!

இதை தொடர்ந்து, அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில்... புதுப்பேட்டை 2 படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிவித்தார். 'புதுப்பேட்டை' வெளியாகி 18 வருடங்களுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகவும் உருவதாக இவர் கூறிய தகவல் இப்படம் மீதான ஆர்வத்த தூண்டியுள்ளது.
 

இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன், கடந்த வாரம் வெளியாகி... லால் சலாம் படத்திற்கே தண்ணி காட்டி வரும் லவ்வர் படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார். இதுகுறித்து அவர் போட்டிருந்த பதிவில்...  "மிகவும் பிரிந்திருந்தது. இந்த தலைமுறையின் காதலை பற்றி காட்டி இருந்தார்கள். சில நிமிடங்கள், நான் படம் பார்க்கிறேன் என்பதையே மறந்துவிட்டேன். அந்த அளவுக்கு ரியலாக இருந்தது என புகழ்ந்து தள்ளி இருந்தார்.

Vanangaan Teaser: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது?
 

இவரின் இந்த பதிவிற்கு இப்படத்தின் ஹீரோவான மணிகண்டன் "மிகவும் நன்றி செல்வராகவன் சார். எங்கள் படம் உங்களுக்கு பிடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி. 'லவ்வர்' போன்ற படத்தைத் எடுக்க நீங்கள் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என தெரிவித்துள்ளார்.

click me!