Sathyaraj: ரஜினி, கமல் எல்லாம் ஓரம்போ..ஒரே ஆண்டில் மாபெரும் சாதனை புரிந்த சத்யராஜ்... அதுவும் எதில் தெரியுமா?

First Published May 16, 2022, 10:39 AM IST

Sathyaraj: இன்றைய கால கட்டத்தில், ஒவ்வொரு வருடமும் சுமார் 200 படங்களுக்கும் மேல் வெளியாகிறது. ஆனால், ஒரு கால கட்டத்தில் ரஜினி, கமல் கூட செய்ய முடியாத சாதனையை நடிகர் சத்யராஜ் செய்து காட்டியுள்ளார். 

sathyaraj

தமிழ் சினிமாவில் ஹீரோ, காமெடி நடிகர்கள், வில்லன் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியாக நடிகர்கள் உள்ளனர். ஆனால், ஒரு சிலர் மட்டுமே எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தூள் கிளப்புவார்கள். 

sathyaraj

அவ்வாறு எல்லா கதாபாத்திரத்திலும் கச்சிதமாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும், நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். வில்லனாக, அறிமுகமாகி ஹீரோவாக களம் கண்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுத் தந்தவர். 

sathyaraj

மேலும் குணச்சித்திர கதாபாத்திரம், துணை கதாபாத்திரம், காமெடி, ஆக்சன் என ஒவ்வொரு துறையிலும், தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தபவர். மேலும்,  ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் அவருடைய கட்டப்பா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடதக்கது. 

sathyaraj

சமீப காலமாக, ஒவ்வொரு வருடமும் சுமார் 200 படங்களுக்கும் மேல் வெளியாகிறது. அதில், முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், ஆகியோரின் படங்கள் ஒன்று அல்லது இரண்டு தான் வெளிவரும். 
 

sathyaraj

ஆனால், ஒரு கால கட்டத்தில், ஒரு நடிகர் நடித்த 28 படங்கள் வெளியாகியுள்ளதை நம்ப முடிகிறதா..? கடந்த 1985 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் 28 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்களில், சத்யராஜ் கதாநாயகன் மற்றும் வில்லனாக நடித்திருந்தார். அதில் பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தன குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க....Britney: திருமணத்திற்கு முன்பே கருவிலேயே இறந்த குழந்தை...மனம் உடைந்த பிரபல பாடகி..ஆறுதல் கூறிய மூன்றாவது கணவர்

click me!