Arbaaz Sshoora Wedding: 56 வயதில் சல்மான் கான் சகோதரருக்கு நடந்த இரண்டாவது திருமணம்! வைரலாகும் வெட்டிங் கிளிக்

First Published Dec 25, 2023, 10:39 AM IST

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரம், பிரபல நடிகை மலைக்கா அரோராவின் முன்னாள் கணவருமான அர்பாஸ் கான் தன்னுடைய காதலி ஷுரா கானை கரம்பிடித்தார்.
 

பாலிவுட் நடிகர், சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான்... நடிகராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர். 56 வயதாகும் இவர் நேற்று செப்டம்பர் 24 அன்று, தனது காதலி ஷுரா கானை திருமணம் செய்து கொண்டார். எளிமையாக நடந்த அர்பாஸ் மற்றும் ஷுராகானின் திருமணத்தில் குறிப்பிட்ட பிரபலங்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் கலந்து கொண்டு இந்த ஜோடிகளை வாழ்த்தியுள்ளனர்.

மேலும் தங்கள் திருமண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றையும் போட்டுள்ளனர். அவர்கள் போட்டுள்ள பதிவில்... "எங்கள் நெருங்கியவர்கள் முன்னிலையில், நானும் என் காதலியும் இந்த நாளிலிருந்து ஒன்றாக வாழ்நாள் முழுவதும் காதலிக்க தயாராகி விட்டோம். எங்களின் இந்த சிறப்பான நாளில், எங்களுக்கு உங்கள் பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் தேவை... என கூறியுள்ளார்.

Salaar Day 3 Box Office: திரையரங்கில் வசூல் மழை..! மூன்றே நாளில் 400 கோடியை நெருங்கும் பிரபாஸின் 'சலார்'!
 

குறிப்பிட்ட பிரபலங்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் மட்டுமே இவர்கள் திருமணத்தில் கலந்து கொண்ட நிலையில் பலர்... தொடர்ந்து அர்பாஸ் மற்றும் ஷுரா கானுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

அர்பாஸ் கான் திருமணத்தில் மலர்கள் டிசைன் அச்சிடப்பட்ட ஷெர்வானியை அணிந்துள்ளார். ​​ஷுரா கான் அதற்க்கு பொருத்தமான லெஹங்காவில் செம்ம கியூடாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்னி கிடைச்சும் பலன் இல்லை... போண்டா மணி மரணத்தின் அதிர்ச்சி பின்னணி! பயில்வான் ரங்கநாதன் கூறிய தகவல்!
 

அர்பாஸ் கான் சல்மான் கானின் சகோதரர் என்பதை தாண்டி, பிரபல நடிகையும், மாடலுமான மலைகா அரோராவின் முன்னாள் கணவர் ஆவார். இவர்களுக்கு 1998 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கிட்டத்தட்ட 19 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி, பின்னர் 2017 இல் விவாகரத்து பெற்றனர். மலைகா அரோரா மற்றும் அர்பாஸ் கானுக்கு அர்ஹான் கான் என்ற மகன் ஒருவரும் உள்ளார். 
 

மலைக்கா அரோராவை பிரிந்த பிறகு, அர்பாஸ் கானின் பெயர் ஜார்ஜியா ஆண்ட்ரியானியுடன் கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் டேட்டிங் செய்து வந்தனர். எனவே எப்போது வேண்டுமானாலும் இவர்களின் திருமண அறிவிப்பு வரும் என கூறப்பட்ட நிலையில்... இருவரும் பிரேக் கப் செய்தனர். இதன் பின்னரே ஷுரா கானை அர்பாஸ் காதலிக்க துவங்கினார். 

Hansika Christmas Special: சுஸர்லாந்தில் கணவருடன் ரொமான்டிக்காக கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஹன்சிகா! வைரல் போட்டோஸ்!
 

 நேற்று ஷுரா கானுடன் அர்பாஸ் கானின் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஷுரா கான் ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆவர். பல பிரபலங்களுக்கு ஒப்பனை செய்து... சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!