Indraja Sankar Wedding: மாமாவையே காதலித்து கரம் பிடித்த ரோபோ ஷங்கர் மகள்! இந்திரஜா பகிர்ந்த போட்டோஸ்!

First Published Mar 25, 2024, 5:21 PM IST

பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனும், நடிகருமான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் நேற்று மதுரையில் நடந்து முடிந்த நிலையில்... தன்னுடைய திருமணம் குறித்த சில புகைப்படங்களை அவரே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
 

Indraja Wedding Photos Source: (Indraja Instagram)

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில், கலந்து கொண்டு பிரபலமானவர் ரோபோ ஷங்கர். இந்த நிகழ்ச்சியில் தன்னை ஒரு மிமிக்ரி கலைஞராக அறிமுகப்படுத்தி கொண்ட, ரோபோ தன்னுடைய காமெடியால், பல ரசிகர்களை விழுந்து... விழுந்து சிரிக்க வைத்தார். இதை தொடர்ந்து பல படங்களில் கிடைக்கும் கேரக்டரில் தன்னுடைய திறமையை நிரூபித்து இவர் தன்னை ஒரு நடிகராக நிலை நிறுத்திக்கொள்ள, சுமார் 10 வருடங்களுக்கு மேல் ஆனது.

Indraja Wedding Photos Source: (Indraja Instagram)

எப்போதும் தன்னை ஏற்றி விட்ட நூலை மறவாத பட்டம் போல்... தொடர்ந்து, விஜய் டிவியில் ஒரு அங்கமாகவே இருந்து வரும் ரோபோ ஷங்கர், கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர், கலக்கபோது யாரு சாம்பியன் 3, போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார்.

Indraja Wedding Photos Source: (Indraja Instagram)

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ள... ரோபோ ஷங்கரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவரது மனைவி மற்றும் மகள் இந்திரஜா தான். இதனை பல முறை அவரே சில பேட்டிகளில் கூறியுள்ளார். 

Indraja Wedding Photos Source: (Indraja Instagram)

ரோபோ ஷங்கரை தாண்டி அவருடைய மனைவி பிரியங்கா ஷங்கரும் சில படங்களிலும், விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிரபலமானவர். ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும்... பிகில் படத்தில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இவர் நடித்த பாண்டியம்மா கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.

Indraja Wedding Photos Source: (Indraja Instagram)

இதை தொடர்ந்து, படிப்பின் காரணமாக தன்னை தேடி வந்த பட வாய்ப்புகளை ஏற்காத இந்திரஜா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து சில வாரங்களிலேயே வெளியேறினார். பின்னர் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமான விருமன் படத்தில் நடித்திருந்தார்.

Indraja Wedding Photos Source: (Indraja Instagram)

கடந்த ஆண்டு இந்திரஜாவுக்கும் அவரின் மாமா கார்த்திக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில்... கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து நேற்று ரோபோ ஷங்கரின் மகள் திருமணம் மதுரையில் நடந்துள்ளது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டுபுதுமண தம்பதியை வாழ்த்தியுள்ளனர். இந்திரஜா தன்னுடைய திருமணம் குறித்த சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில்... அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!