தித்திக்கும் கரும்புச்சாறு.. இவர்களுக்கோ விஷத்திற்கு சமம்..! ஏன் அப்படி தெரியுமா...?

First Published Mar 22, 2024, 1:29 PM IST

கரும்புசாறு கோடைக்கு சிறந்த பானம். ஆனால், இதை எல்லாரும் குடிக்க கூடாது தெரியுமா..?

தற்போது கோடை சீசன் நடந்து வருகிறது. கோடை காலம் தொடங்கும் போதே கடைகளில் பல்வேறு ஜூஸ்கள், குளிர்பானங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதில் எலுமிச்சை சாறு, மோர், புதினா ஜூஸ், கரும்புச்சாறு போன்றவை அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

அதிலும் குறிப்பாக, கரும்புச் சாற்றை எல்லாரும் விரும்பி குடிப்பார்கள். இது குடிப்பதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. இதில் கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது மட்டுமின்றி,  பல நோய்களையும் குணப்படுத்தும். இது செரிமானம், எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இத்தனை நன்மைகள் இருந்தும் எல்லாரும் இதை குடிக்க கூடாது. ஏனெனில் இது சிலருக்கு மோசமான தீங்கை விளைவிக்கும். இப்போது யாரெல்லாம் கரும்பு சாறு குடிக்க கூடாது என்று பார்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகள் கரும்புச்சாறு குடிக்கக்கூடாது. இது குறைந்த கிளைசெமிக் குறியீடு, அதிக கிளைசெமிக் சுமை கொண்டது. இதன் காரணமாக இது இரத்த சர்க்கரையை பாதிக்கிறது. மேலும் இதில் ஏற்கனவே, சர்க்கரை அதிகம் இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் இதை குடித்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும்.

பலவீனமான செரிமான அமைப்பு உள்ளவர்கள்: பலவீனமான செரிமான அமைப்பு உள்ளவர்கள் கரும்பு சாறு குடிக்கக்கூடாது. இதில் உள்ள பாலிகோசனால் செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இதனால் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.

உடல் பருமன் உள்ளவர்கள்: உடல் பருமன் உள்ளவர்கள் கரும்புச்சாறு குடிக்கக்கூடாது. இதில் அதிக கலோரி உள்ளடக்கம் உள்ளது. எனவே இதை குடித்தால் உடல் எடை கூடும். மேலும், இதில் அதிக சர்க்கரை இருப்பதால் உடலில் கொழுப்பை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக கரும்பு சாறு குடிக்கக்கூடாது.

இதையும் படிங்க:  கரும்பு சாறு சருமம் மற்றும் கூந்தல் அழகிற்கு சிறந்ததா? இதன் உண்மை தன்மை என்ன?

சளி, இருமல்: சளி, இருமல் இருந்தால் கரும்புச்சாறு குடிக்கக் கூடாது. மீறி குடித்தால் அவை மேலும் அதிகரிக்கும் அதுமட்டுமின்றி, தொண்டை வலி, தலைவலி போன்ற பிரச்சினையும் வரும்.

இதையும் படிங்க: Sugarcane juice: உடல் சூடு அதிகமாக இருக்க..? கோடையில் வெப்பம் தணிக்கும்..கரும்பு ஜூஸின் 5 நன்மைகள்..!

தூக்கமின்மை பிரச்சனை: நீங்கள் தூக்கமின்மையால் அவதிப்பட்டால் கரும்புச்சாறு குடிக்கக் கூடாது. இதில் உள்ள பாலிகோசனால் தூக்கத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதன் காரணமாக நீங்கள் தூக்கமின்மை மற்றும் மன அழுத்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!