Gaslighting : உங்கள் துணை உங்களை கேஸ் லைட்டிங் செய்கிறாரா? கவனிக்க வேண்டிய அறிகுறிகள் இவை தான்..

First Published Apr 29, 2024, 3:59 PM IST

உங்கள் துனை உங்களை தொடர்ந்து கேஸ் லைட்டிங் செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள சில அறிகுறிகள் உள்ளன

நீங்கள் எப்போதாவது ஒரு உரையாடலில் இருந்து குழப்பமடைந்து, திசைதிருப்பப்பட்டு, உங்கள் உண்மையான குணத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறீர்களா? அல்லது உங்கள் மீது தான் தவறு என்று உங்கள் மீதே எப்போதாவது சந்தேகம் ஏற்பட்டுள்ளதா? ஆம். எனில் உங்கள் துணை உங்களை கேஸ் லைட்டிங் செய்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

கேஸ்லைட்டிங் என்பது ஒரு வகையான துஷ்பிரயோகமாகும், இதனை மிகவும் நுட்பமாக செய்வார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை சந்தேகிக்கத் தொடங்குகிறார்கள். எனவே கேஸ்லைட்டைப் புரிந்துகொள்வது இந்த துஷ்பிரயோகத்தை நிறுத்துவதற்கும் அதில் சிக்கியவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் முதல் படியாகும்.

கேஸ்லைட்டிங் என்றால் என்ன?

கேஸ்லைட்டிங் என்பது உங்கள் அறிவு, நினைவுகள் மற்றும் யதார்த்தத்தைப் பற்றிய உணர்வைக் கேள்விக்குள்ளாக்குவதற்கு யாரோ ஒருவர் பயன்படுத்தும் ஒரு கையாளுதல் தந்திரமாகும். உங்கள் துனை உங்களை தொடர்ந்து கேஸ் லைட் செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள சில அறிகுறிகள் உள்ளன. 

உங்கள் துணை மீது தவறு என்று நீங்கள் முதலில் அறிந்திருந்தாலும், அவர்கள் ஒருபோதும் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். காலப்போக்கில், நீங்கள் தவறாக நினைவில் வைத்திருக்கிறீர்களா என்று நீங்கள் யோசிக்க ஆரம்பிக்கலாம். உங்கள் மனதை உங்களால் நம்ப முடியவில்லை என்பது போன்ற உணர்வு, ஆதரவை அடைவதை கடினமாக்குகிறது. நீங்கள் அனுபவித்ததை நம்பிக்கையுடன் மறுக்கலாம். இதனால் உங்கள் மீதான சுய நம்பிக்கையே கேள்விக்குறியாகும்.

உங்கள் துணை உங்களை கேஸ் லைட்டிங் செய்தால், உங்கள் வார்த்தைகளின் அர்த்தத்தை மாற்றலாம். அல்லது நீங்கள் சொல்வதை திரித்து கூறலாம். உங்களை குழப்பி மற்றும் நிச்சயமற்றதாக உணர வைப்பதே அவர்களின் குறிக்கோள். காலப்போக்கில், உங்கள் வார்த்தைகள் திரிக்கப்பட்டு உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்று பயந்து, ஒருக்கட்டத்தில் நீங்கள் பேசவே தயங்கலாம்.

அவர்கள் மீது எந்த தவறும் இல்லை  என்பதை தொடர்ந்து நிரூபிப்பார்கள். மேலும் அவர்கள் செய்யும் செயல்களுக்கு உங்களைக் குறை கூறுவார்கள். அதாவது அவர்கள் தவறு செய்தாலும் உங்கள் மீது தான் தவறு என்று கூறி உங்களை மன்னிப்பு கேட்க வைப்பார்கள். நீங்கள் தான் பிரச்சனை என்று நீங்கள் நம்ப தொடங்குவீர்கள்.

Sign That Indicates Your Partner Is Suffering From Depression

அவர்கள் உங்கள் சரியான உணர்ச்சிகளை நிராகரிப்பார்கள், உங்களை அதிக உணர்திறன் கொண்ட நபர், அல்லது பகுத்தறிவற்றவர் என்று முத்திரை குத்துவார்கள். அவர்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை நம்பத்தகாதவர்கள் என்று சித்தரிப்பார்கள். அவர்களுடன் நீங்கள் பேசுவதை தடுத்து, உங்களை தனிமைப்படுத்துவார்கள்.

நீங்கள் அவர்களுடன் உரையாடும் போது உங்களை எது காயப்படுத்துகிறது என்று நீங்கள் சொல்லும் போது அவர்கள் உரையாடலை திசை திருப்புவார்கள், கவனத்தை மாற்றுவார்கள் அல்லது தலைப்பை மாற்றுவார்கள். வேறு எதையும் நீங்கள் யோசிக்காத வகையில், மீண்டும் மீண்டும் வரும், நியாயமற்ற வாதங்களில் சிக்க வைக்கிறார்கள், நீங்களே உங்கள் மீது தான் தவறு என்று மன்னிப்பு கேட்கும் வரை அவர்கள் உங்கள் மீது பழி சுமத்துவார்கள். இந்த அறிகுறிகள் இருந்தால் நிச்சயம் உங்கள் துணை கேஸ் லைட்டிங் செய்கிறார் என்று அர்த்தம்.. 

click me!