இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த சூரியகாந்த புயலை ஆதித்யா எல் 1 (Aditya L1) பதிவுசெய்துள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய முதல் விண்கலம் ஆதித்யா எல்-1. இந்த விண்கலம் கடந்த மே 10, 12ஆம் தேதிகளில் சூரிய வெடிப்பைப் படமெடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இஸ்ரோ, 2003ஆம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த சூரியகாந்த புயல் இது என்றும் தெரிவித்துள்ளது.
ஆதித்யா எல் 1 விண்கலம் சென்ற ஆண்டு செம்படம்பர் மாதம் ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. சூரியனை ஆய்வு செய்யும் முதல் திட்டமாகவும் இஸ்ரோ ஆதித்யா எல் 1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.
ISRO Captures the Signatures of the Recent Solar Eruptive Events from Earth, Sun-Earth L1 Point, and the Moonhttps://t.co/bZBCW9flT1 pic.twitter.com/SaqGu5LjOV
— ISRO (@isro)பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ. தூரம், 125 நாட்கள் பயணித்த ஆதித்யா எல் 1 விண்கலம் எல் 1 எனப்படும் லாக்ராஞ்சியன் புள்ளியில் கடந்த ஜனவரி மாதம் நிலைநிறுத்தப்பட்டது. சூரியனின் ஈர்ப்பு விசையும் புவி ஈர்ப்பு விசையும் சரிசமமாக உள்ள பகுதி எல் 1 அல்லது லாக்ராஞ்சியன் புள்ளி என அழைக்கப்படுகிறது.