Health Tips : மாம்பழத்தை சாப்பிடும் முன் ஏன் தண்ணீரில் ஊற வைக்கிறார்கள் தெரியுமா..?

First Published Apr 23, 2024, 7:45 PM IST

நீங்கள் மாம்பழத்தை சாப்பிடும் முன் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

கோடையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாம்பழம் சாப்பிடுவது ஒரு தனி மகிழ்ச்சி என்று சொல்லலாம். காரணம் மாம்பழத்தின் சுவை அப்படி இருக்கும். சொல்லபோனால், மாம்பழங்களுக்காகவே கோடையை எதிர்நோக்கும் பலர் நம்மில் இருக்கிறார்கள்.

ஆனால் மாம்பழம் சாப்பிடுவதில் சில விஷயங்களை பின்பற்றப்படுவது மிகவும் அவசியம். குறிப்பாக மாம்பழங்களை சாப்பிடும் முன் தண்ணீரில் ஊறவைப்பது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் மாம்பழங்களை தண்ணீரில் ஊற வைப்பதன் உண்மையான காரணம் என்ன..? என்பது பலருக்கு தெரிவதில்லை. இப்படி செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை குறித்து இப்போது பார்க்கலாம்..

மாம்பழத்தில் பைட்டோ கெமிக்கல்கள், பயோஆக்டிவ் கலவைகள் மற்றும் கொழுப்பு செல்கள் நிறைந்துள்ளது. அவை உடலில் கொழுப்பு தொடர்பான மரபணுக்களை பாதிக்கின்றது. எனவே, இவற்றை தடுக்க மாம்பழங்களை தண்ணீரில் ஊறவைத்தால், இவற்றின் செறிவுகள் குறைந்து, உடலில் தீங்கு விளைவிக்கும் கொழுப்பைக் கரைக்க பயனுள்ளதாக இருக்கும். 

இதனால்தான் மாம்பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் ஊறவைக்கிறார்கள். மேலும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புபவர்களும் இதைச் செய்யலாம்.

அதுபோல மாம்பழம் சூட்டைக் கிளப்பும் என்று அனைவருக்கும் தெரியும். எனவே, இதை அதிகமாக எடுத்துக் கொண்டால், முகப்பரு, உடலில் சூடு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆகையால், மாம்பழத்தை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து பிறகு சாப்பிடால், உடலில் உள்ள வெப்பத்தை உண்டாக்கும் தன்மைகள் நீங்கும்.

இதையும் படிங்க: Mango Tips : இனியும் ஏமாறாதீங்க! மாம்பழத்தை இப்படி பார்த்து வாங்குங்க.. போலி மாம்பழம் இப்படி தான் இருக்கும்!

மாம்பழத்தில் பல நல்ல சத்துக்கள் உள்ளன. குறிப்பாக, இதில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் ஃபோலேட்டுகள் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் இந்த நன்மைகள் அனைத்தையும் பெற விரும்பினால்,  மாம்பழங்களை சாப்பிடுவதற்கு முன் குறைந்தது 1 முதல் 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: மாம்பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா..? நீண்ட நாள் கெட்டு போகாமல் இருக்க என்ன செய்ய..?

சமீபகாலமாக, மாம்பழம் விரைவில் பழுக்க ரசாயனங்கள் பயன்படுத்துகின்றன. இவை பழத்தின் தோலில் குவிந்து இருக்கும். எனவே, நீங்கள் மாம்பழத்தை சரியாகக் கழுவாமல் சாப்பிட்டால், உடல்நலக் கேடு ஏற்படும். எனவே, குறைந்தது ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்தால் அனைத்து ரசாயனங்களும் நீங்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!