மலர் டீச்சராக அறிமுகமாகி கோலிவுட்டின் ரெளடி பேபியாக கலக்கி வரும் சாய் பல்லவியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

First Published May 9, 2024, 8:48 AM IST

நடிகை சாய் பல்லவி இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் குறித்து பார்க்கலாம்.

Sai Pallavi

சாய் பல்லவி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு  வருவது அவரின் மலர் டீச்சர் கதாபாத்திரம் தான். ஜார்ஜியாவில் மருத்துவ படிப்பு முடித்த கையோடு பிரேமம் என்கிற மலையாள படத்தில் நடித்தார் சாய் பல்லவி. இவர் கோத்தகிரியை சேர்ந்தவராக இருந்தாலும் இவரை ஹீரோயினாக்கி அழகு பார்த்தது மலையாள சினிமா தான். 

Premam Actress Sai Pallavi

மலையாளத்தில் இவர் நடித்த முதல் படமான பிரேமம் வேறலெவல் ஹிட் அடித்தது. அதற்கு சாய் பல்லவியும் ஒரு முக்கிய காரணம். அந்த படத்தில் அவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. அந்த அளவுக்கு யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே டிரெண்ட் ஆனார் சாய் பல்லவி.

Sai Pallavi movies

பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற சாய் பல்லவி அங்கு ஃபிடா, லவ் ஸ்டோரி, ஷியாம் சிங்கா ராய் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். இதையடுத்து ஏ.எல்.விஜய் இயக்கிய தியா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார் சாய் பல்லவி.

Sai Pallavi photos

பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்தார். அப்படம் பெரியளவில் ஹிட்டாகாவிட்டாலும் அதில் தனுஷுடன் சேர்ந்து ரெளடி பேபி பாடலுக்கு சாய் பல்லவி போட்ட ஆட்டம் வேறலெவலில் ஹிட் ஆனது. அப்பாடலுக்கு யூடியூப்பில் மில்லியன் கணக்கில் வியூஸ் வருவதோடு இன்றளவும் டிரெண்டிங்கில் உள்ளது.

Rowdy Baby sai pallavi

மாரி 2 படத்தை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக என்.ஜி.கே. படத்தில் நடித்தார். செல்வராகவன் இயக்கிய இந்த படமும் பிளாப் ஆனதால் கமர்ஷியல் படங்களுக்கு குட் பாய் சொல்லிவிட்டு கதையின் நாயகியாக நடிக்க தொடங்கினார். அந்த வகையில் அவர் நடித்த கார்கி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்... Raai Laxmi: 35-ஆவது பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடிய ராய் லட்சுமி! ரசிகர்களுக்கு வைத்த கவர்ச்சி ட்ரீட் இதோ!

sai pallavi amaran movie

கார்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி நடிப்பில் தற்போது அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி.

Ramayana Movie actress Sai Pallavi

இதுவரை தென்னிந்திய திரையுலகில் கலக்கி வந்த நடிகை சாய் பல்லவி தற்போது பாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுத்துள்ளார். அங்கு அமீர்கான் மகனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கும் சாய் பல்லவி, அண்மையில் ராமயணா என்கிற பிரம்மாண்ட படத்தில் நடிக்க கமிட் ஆனார். இப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிக்கிறார் சாய் பல்லவி.

Sai Pallavi Salary

கடந்த ஆண்டு வரை ஒரு படத்துக்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த சாய் பல்லவி, தற்போது பாலிவுட்டுக்கு போனதும் தன் சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தி இருக்கிறாராம். பாலிவுட்டில் உருவாகி வரும் ராமயணா படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சாய் பல்லவிக்கு ரூ.6 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம்.

Sai Pallavi Birthday

வழக்கமாக நடிகைகள் சினிமாவை தாண்டு விளம்பரங்களில் நடித்தும் கோடி கோடியாய் சம்பாதிப்பார்கள், ஆனால் சாய் பல்லவி அதில் சற்று வித்தியாசமானவர். இவரை அழகு சாதன கிரீம்களுக்கான நடிக்க அழைத்து கோடிக்கணக்கில் சம்பளம் தர முன்வந்தனர். ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டார் சாய் பல்லவி.

Sai Pallavi Net Worth

நடிகை சாய் பல்லவி இன்று தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை சாய் பல்லவியின் சொத்து மதிப்பு ரூ.40 முதல் ரூ.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவருக்கு சொந்தமாக கோத்தகிரியில் சொகுசு பங்களா உள்ளது. இதுதவிர ஏராளமான சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார் சாய் பல்லவி.

இதையும் படியுங்கள்... Vani Bhojan : பச்சை நிறமே.. கிறங்க வைக்கும் பார்வையில்.. ரசிகர்களை குஷிப்படுத்திய நடிகை வாணி போஜன்..

click me!