வசூல் வேட்டைக்கு தயாரான ரஜினி... முட்டுக்கட்டை போடுவாரா தளபதி? வேட்டையன் vs கோட்... ஒரே நாளில் ரிலீஸா..!

First Published Mar 10, 2024, 1:42 PM IST

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படமும், விஜய் நடித்து வரும் கோட் திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

vettaiyan, GOAT

தமிழ் சினிமாவில் விஜய் - அஜித் ரசிகர்கள் மோதிக்கொண்ட காலம்போய், சமீப காலமாக விஜய் - ரஜினி ரசிகர்கள் பரம எதிரிகள் போல் மோதிக்கொண்டுள்ளனர். இதற்கு காரணம் சூப்பர்ஸ்டார் பட்டம் தான். ஜெயிலர் படத்துக்கு முன்னர் வரை நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என்கிற பேச்சு பரவலாக எழத் தொடங்கியது. முன்னணி நடிகர்களே விஜய்யை அடுத்த சூப்பர்ஸ்டார் என புகழ்ந்து பேசினர்.

Vettaiyan Rajini

இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள், விஜய்யை கடுமையாக தாக்கி பேசினர். இதற்கு விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்தனர். இதனால் எக்ஸ் தளமே போர்க்களமானது. பின்னர் ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சில் ரஜினி நடிகர் விஜய்யை விமர்சித்து தான் காக்கா, கழுகு கதை சொன்னதாக சர்ச்சை எழுந்தது. அதுமட்டுமின்றி அந்நிகழ்ச்சியில் பேசிய சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், ரஜினி தான் என்றைக்குமே சூப்பர்ஸ்டார் என்றும் தடாலடியாக பேசி இருந்தார்.

இதையும் படியுங்கள்... திருமலை படத்தில் ஜோதிகாவுக்கு முன் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்தது பிரபல டாப் ஹீரோவின் மனைவியா?

GOAT Movie

இதனால் விஜய் - ரஜினி ரசிகர்கள் மோதல் மேலும் வெடித்தது. பின்னர் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து இந்த சூப்பர்ஸ்டார் சர்ச்சை சற்று ஓய்ந்திருந்தது. இதையடுத்து லியோ பட சக்சஸ் மீட்டில் பேசிய விஜய், ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் தான் அது ரஜினிகாந்த் மட்டும் தான் என பேசி இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல் ரஜினிகாந்தும் லால் சலாம் ஆடியோ லாஞ்சில் பேசுகையில், விஜய் தனக்கு போட்டியல்ல எனக்கூறி தன் பங்கிற்கு விளக்கம் கொடுத்தார்.

GOAT movie Release Date

இதனால் விஜய் - ரஜினி ரசிகர்கள் சண்டை ஓய்ந்த நிலையில், தற்போது அவர்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடக்கப்போகிறதாம். அது என்னவென்றால் விஜய்யின் கோட் படமும், ரஜினியின் வேட்டையன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

வேட்டையன் சமூக கருத்துள்ள படம் என்பதால் அதை தீபாவளிக்கு பதிலாக ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என படக்குழு முடிவெடுத்துள்ளதாம். மறுபுறம் கோட் பட பணிகளும் முடிவடைய உள்ளதால், அவர்களும் ஆகஸ்ட்டில் அப்படத்தை திரைக்கு கொண்டுவரும் ஐடியாவில் உள்ளார்களாம். ஒருவேளை ரஜினி - விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் ரசிகர்கள் மோதல் ஒருபுறம் இருக்க, பாக்ஸ் ஆபிஸிலும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அன்றைய தினம் அல்லு அர்ஜுனின் பான் இந்தியா படமான புஷ்பா 2-வும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கோலிவுட் சீக்ரட்ஸ்... இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியது இந்த தமிழ் நடிகையா?

click me!