எடுத்த எல்லா படமும் ஹிட்டு... ரூ.4200 கோடி வசூலுடன் பாக்ஸ் ஆபிஸில் பாகுபலியாக உள்ள இயக்குனர் பற்றி தெரியுமா?

First Published Mar 26, 2024, 3:08 PM IST

தென்னிந்திய திரையுலகில் வரிசையாக பிரம்மாண்ட வெற்றிப்படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் பாகுபலியாக வலம் வரும் பிரபல இயக்குனர் பற்றி பார்க்கலாம்.

நடிகர், நடிகைகளுக்காக படம் பார்க்க சென்ற காலம் போய் தற்போது இயக்குனர்களுக்காக படம் பார்க்க செல்லும் காலம் வந்துவிட்டது. இன்றைக்கு இயக்குனர்களுக்கே தனி ஃபேன் பேஸ் இருக்கிறது. இதனால் அவர்கள் இயக்கும் படங்கள் மீது தனி கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள் ரசிகர்கள். அப்படி மக்களின் மனம் கவர்ந்த இயக்குனர் ஒருவரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். அவர் வேறுயாருமில்லை இயக்குனர் ராஜமவுலி தான்.

இந்தியாவில் பிரம்மாண்ட படங்கள் என்றாலே அது ஷங்கர் தான் என சொன்னவர்களுக்கு அதைவிட தன்னாலும் பிரம்மாண்ட படங்களை எடுக்க முடியும் என நிரூபித்து காட்டியவர் தான் ராஜமவுலி. பாகுபலி படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் பிரம்மாண்ட இயக்குனர் பட்டத்தை தட்டிச் சென்றிருக்கிறார் ராஜமவுலி. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

இதையும் படியுங்கள்... April Release Movies : எலக்‌ஷனுக்கு மத்தியில் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ள தமிழ் படங்களின் முழு லிஸ்ட் இதோ

20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வரும் ராஜமவுலி இதுவரை வெறும் 12 படங்கள் மட்டுமே இயக்கி இருக்கிறார். ஆனால் அந்த 12 படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதிலும் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த 5 படங்களும் அமோக வெற்றியை ருசித்ததோடு, பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது. 1000 கோடி என்பது கோலிவுட்டுக்கு எட்டாக் கனியாக இருக்கும் நிலையில், அதனை தன்னுடைய இரு படங்களில் எட்டிப்பிடித்திருக்கிறார் ராஜமவுலி.

ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மட்டும் ரூ.2400 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரூ.1300 கோடி வசூலை வாரிக்குவித்தது. இதுதவிர அவர் இயக்கிய நான் ஈ திரைப்படம் ரூ.125 கோடியும், மகதீரா திரைப்படம் ரூ.150 கோடியும் வசூலித்து இருந்தது. இவையெல்லாம் அவர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள். மொத்தமாக அவர் இயக்கிய 12 படங்களின் டோட்டல் வசூல் ரூ.4200 கோடி என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பூமர் அங்கிள் முதல் ஆடுஜீவிதம் வரை... இந்த வாரம் மட்டும் தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா?

click me!