Udhayanidhi : ஆவேஷம் பகத் பாசிலாக மாறி... மகன் இன்பநிதி உடன் லண்டனில் Vibe செய்த உதயநிதி - வைரலாகும் போட்டோ

Published : May 09, 2024, 10:02 AM ISTUpdated : May 09, 2024, 10:04 AM IST

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகள் இருப்பதால் உதயநிதி தனது குடும்பத்தோடு வண்டன் சென்றுள்ளார். இந்தநிலையில் தனது மகன் இன்பநிதி உடன் லண்டனில் Vibe செய்த போட்டோவை வெளியிட்டுள்ளார். 

PREV
15
Udhayanidhi : ஆவேஷம் பகத் பாசிலாக மாறி... மகன் இன்பநிதி உடன் லண்டனில் Vibe செய்த உதயநிதி - வைரலாகும் போட்டோ

சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேடுவதற்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலானது ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சுமார் இரண்டு மாதங்கள் நடைபெறும் இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 1ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிவடைந்துள்ளது. 

25
m k stalin golf

சுற்றுலா சென்ற முதலமைச்சர்

இதனையடுத்து தேர்தல் நடைமுறைகள் கட்டுப்பாட்டில் இருப்பதால் அரசால் செயல்பட முடியாத நிலை உள்ளது. குறிப்பாக புதிய திட்டங்களை அறிவிப்பதோ, தொடங்குவதோ கூடாது குறிப்பாக விபத்தில் இறந்தவர்களுக்கு நிதி உதவி கூட அறிவிக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக முதலமைச்சர் முதல் எம்எல்ஏக்கள் வரை வெளியூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் லண்டன் பயணம்: ரியல் ரவுடியுடன் விமானத்தில் போஸ்..!

35

அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள் உற்சாகம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவியோடு கொடைக்கானல் சென்று ஓய்வெடுத்தார். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிகிச்சைக்காக கேரளா சென்றார்.  அமைச்சர்கள் அன்பில் மகேஷ் திமுக நிர்வாகிகளோடு சேர்ந்து கொடைக்கானல் சென்றனர். இதே போல திமுக எம்பி அ.ராசா லண்டன் சென்றுள்ளார். இதே போல கர்நாடகாவில் தேர்தல் முடிவடைந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஊட்டியில் ஓய்வெடுத்து வருகிறார்.

45

ரியல் ரவுடியோடு உதயநிதி

இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 8,465 கிலோ மீட்டர் பயணம் செய்து 122 பிரசார முனைகளில் 3,726 நிமிடங்கள் பேசி சாதனை படைத்தார் உதயநிதி ஸ்டாலின். தற்போது அமைச்சர் உதயநிதி தனது குடும்பத்தோடு வெளிநாடு பயணம் சென்றுள்ளார்.

கடந்த வாரம் தனது சென்னையில் இருந்து புறப்பட்டவர் லண்டனில் பல்வேறு இடங்களில் சுற்றி வருகிறார். விமானத்தில் பயணத்தின் போது தனது மகளோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில்  அந்த புகைப்படத்தின் கேப்சனில் ரியல் ரவுடி என்று அவர் பதிவிட்டிருந்தார்.

55

லண்டனில் உதயநிதி, இன்பநிதி

இந்த நிலையில் தனது மகன் இன்பநிதியோடு எடுத்த படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது மிகவும் ட்ரெண்டிங்காக பரவி வரும் ஆவேஷம் படத்தில் பகத் பாசில் வீடியோ போன்று உதயநிதியும், இன்பநிதியும் போஸ் கொடுத்துள்ளனர்.

அந்த புகைப்படத்தின் மேல் எந்த நாட்டிற்கு எவ்வளவு தூரம் என கிலோ மீட்டர் குறிப்படிப்பட்டுள்ளது. அதில் ஒரு பக்கம் உதயநிதி போவது போலவும், மற்றொரு பக்கம் இன்பதி செல்ல வேண்டும் என்று கூறுவது போல் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தை நெட்டிசன்கள் வைராக்கி வருகின்றனர். 

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் விண்ணப்பிப்பது எப்படி.? என்னென்ன தகவல்கள் பதிவு செய்ய வேண்டும் தெரியுமா.?

click me!

Recommended Stories