வாட்டி வதைக்கும் வெயில்
வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அனல் காற்றானது வீசுகிறது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
மேலும் பள்ளியில் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்களும் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் மொபைல் போனை தொடர்ந்து பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வெளியூருக்கு சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர்.
kodaikanal ooty entry
ஊட்டி, கொடைக்கானல் வானிலை எப்படி,?
வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற பல இடங்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து கோவைக்கு செல்கின்ற ரயில்களில் அனைத்துமே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. இன்னும் ஒரு மாதத்திற்கு காத்திருப்போர் பட்டியல் மட்டுமே உள்ளது. அதையும் மீறி பேருந்து மற்றும் வாகனங்களை செல்பவர்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தற்போது கிளைமேட் எப்படி உள்ளது வெயிலின் தாக்கம் உள்ளதா கூலிங்காக உள்ளதா என்ற குழப்பமான நிலை உள்ளது.
ஊட்டி வானிலை நிலவரம்
இந்த நிலையில் தான் ஊட்டி, கொடைக்கானலுக்கு அதிகமான மக்கள் வருவதை கட்டுப்படுத்தும் வகையில் இ-பாஸ் திட்டமானது தமிழக அரசு சார்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது அந்த வகையில் மே மாதம் 7ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை இபாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஊட்டியில் தற்போது உள்ள வானிலையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக வெயிலானது ஊட்டியையும் விட்டு வைக்கவில்லை. சமதள பகுதியை போல் ஊட்டியிலும் 29 டிகிரி வரை வெயிலின் தாக்கமானது பதிவாகி இருந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக அவ்வப்போது ஊட்டியில் மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கமானது படிப்படியாக குறைந்துள்ளது.
கூலிங்கான ஊட்டி
இன்றைய காலை நிலவரப்படி ஊட்டியானது மிகவும் கூலிங்காக உள்ளது. மேகமூட்டத்துடன் இதமான வானிலையாக உள்ளது. இரவு நேரத்தில் கூலிங் ஆனது இன்னும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. தமிழக அரசால் இயக்கப்படும் சர்க்யூட் பஸ் மூலமே முக்கியமான இடங்களுக்கு சென்று சுற்றுலாப் பணிகள் இடங்களை சுற்றி பார்க்க வேண்டிய நிலை உள்ளது.
குளு குளு கொடைக்கானல்
கொடைக்கானலில் பொறுத்தவரை இ பாஸ் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதல் நாள் என்பதால் இபாஸ் எப்படி பெறுவது என்பது தெரியாமல் கொடைக்கானலில் வந்தவர்கள் தவிக்கும் நிலை உருவானது. கொடைக்கானலில் உதகையையை விட அதிகமான கூலிங் உள்ளது.