240 அடிச்சாலும் திரும்ப அடிச்சிருப்பாங்க, இந்த பேட்டிங்க டிவில தான் பாத்துருக்கேன், இப்போதான் நேருல பாக்குறேன்

First Published May 9, 2024, 9:58 AM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பிறகு பேசிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல், நாங்கள் 240 அடிச்சிருந்தாலும் திரும்ப அடித்திருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

SRH vs LSG IPL 2024

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற 57ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது, 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஆயூஷ் பதோனி 55 ரன்கள் எடுத்தார்.

SRH vs LSG IPL 2024

பின்னர் எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் இன்று தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு டிரீட் கொடுக்கும் வகையில் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் இம்பேக்ட் பிளேயராக அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

SRH vs LSG IPL 2024

இதில், அபிஷேக் சர்மா இன்று தனது 100ஆவது டி20 போட்டியில் விளையாடினார். தொடக்கம் முதலே ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில், ஹெட் 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். இதில், 6 பவுண்டரி, 4 சிக்ஸர் அடங்கும். மேலும், இந்த சீசனில் 2ஆவது முறையாக 16 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். ஒரு முறை 18 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.

SRH vs LSG IPL 2024

டிராவிஸ் ஹெட்டைத் தொடர்ந்து அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். கடைசியில் இருவரும் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

SRH vs LSG IPL 2024

அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 75 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 8 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 89 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் 7 வெற்றிகளுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேறியது.

SRH vs LSG IPL 2024

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்துள்ளது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணியானது முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. 

Sanjiv Goenk-KL Rahul

இந்தப் போட்டிக்கு பிறகு பேசிய லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் கூறியிருப்பதாவது: பேசுவதற்கு வார்த்தையே இல்லை. இந்த பேட்டிங்கை எல்லாம் டிவில தான் பார்த்திருக்கிறேன். எல்லாமே மிடில் பேட்டிலிருந்து வந்திருக்கிறது. திறமைக்கு வாழ்த்துக்கள். சிக்ஸர் அடிக்கும் திறமைக்காக கடுமையாக உழைத்துள்ளனர்.

SRH vs LSG IPL 2024

2ஆவது இன்னிங்ஸில் ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதை அறிய அவர்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. நீங்கள் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் என்ன முடிவுகள் எடுக்கப்படும் என்பதில் கேள்விகள் இருக்கும். நாங்கள் 40 முதல் 50 ரன்கள் குறைவாக இருந்தோம். அதோடு, பவர்பிளேயில் விக்கெட்டுகளை இழந்த பிறகு பெரிய ஷாட்டுகளை அடிக்கவில்லை. ஆயுஷ் மற்றும் நிக்கி இருவரும் நன்றாக விளையாடினார்கள். ஆதலால், 166 ரன்கள் எடுக்க முடிந்தது. நாங்கள், 240 ரன்கள் அடித்திருந்தாலும், அதனை அவர்கள் துரத்தியிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

click me!