டப்பிங் யூனியனில் சந்தா கட்டாத விஜய் மீது எடுக்காத ஆக்‌ஷனை சின்மயி மீது மட்டும் எடுத்தது ஏன்? ராதாரவி விளக்கம்

First Published Mar 14, 2024, 9:35 AM IST

டப்பிங் யூனியனில் தலைவராக இருக்கும் ராதா ரவி, தன் மீது சின்மயி சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு முதன்முறையாக பதிலளித்து பேசி இருக்கிறார்.

Chinmayi, Radha Ravi

வைரமுத்து மீது மீடூ புகார் கூறியதை அடுத்து பாடகி சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார். இதன் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அவரால் தமிழ் படங்களுக்கு டப்பிங் பேச முடியாமல் போனது. தன்னை வேண்டுமென்றே திட்டமிட்டு டப்பிங் யூனியனில் இருந்து ராதா ரவி நீக்கியதாக சின்மயி குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதேபோல் சந்தா கட்டாத விஜய், ஸ்ருதிஹாசன் டப்பிங் யூனியனில் நீடிக்கும்போது சின்மயி மீது மட்டும் ஆக்‌ஷன் எடுக்கப்பட்டது ஏன் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

Radha Ravi

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் ராதா ரவி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி டப்பிங் யூனியனில் மஞ்சள் நிற அட்டை வைத்திருப்பவர்கள் ஆண்டுதோறும் தங்கள் சந்தாவை புதுப்பிக்க வேண்டுமாம். அந்த கார்டை வைத்திருக்கும் சின்மயி அதனை புதுப்பிக்க தவறியதால் அவரை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கிவிட்டதாக கூறினார். அதுமட்டுமின்றி மஞ்சள் நிற கார்டு வைத்திருக்கும் அவர் தன்னிடம் வெள்ளை நிற கார்டு இருப்பதாக பொய் சொன்னதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... விடுதலை நான் நடிக்க வேண்டிய படம்... வெற்றிமாறன் கெஞ்சி கேட்டும் நடிக்க மறுத்தது ஏன்? - சீமான் விளக்கம்

Vijay

அதேபோல் விஜய், ஸ்ருதிஹாசன் போன்றவர்கள் டப்பிங் யூனியனில் சந்தா கட்டாமல் இருந்தாலும் அவர்கள் டப்பிங் யூனியனில் நீடிப்பது பற்றி விளக்கம் அளித்த ராதா ரவி, விஜய், ஸ்ருதிஹாசன் போன்றவர்களுக்கு ஹெரால்டு ராமசாமி என்பவர் மாத மாதம் 15 ஆயிரம் கொடுத்து சந்தா கட்டாதவர்களுக்கு இந்த பணத்தில் இருந்து எடுத்துக் கொள்ளுமாறு கொடுப்பாராம். அதில் இருந்து எடுத்துக் கொள்வோம் என அந்த பேட்டியில் ராதா ரவி விளக்கம் அளித்துள்ளார்.

Radha Ravi says about chinmayi

இதுதவிர டப்பிங் கலைஞர்களுக்கு பாலியல் சீண்டல் நடப்பதாக சங்கீதா என்கிற டப்பிங் ஆர்டிஸ்ட் பரபரப்பு புகார் அளித்துள்ளார். ஷாஜி என்பவர் டப்பிங் ஸ்டூடியோவிலேயே தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக அவர் டப்பிங் யூனியனில் புகார் அளித்தாராம். ஆனால் அந்த புகாரை அவர்கள் ஆரம்பத்தில் ஏற்க மறுத்துவிட்டார்களாம். பின்னர் தான் கோர்ட்டுக்கு செல்லப்போவதாக சொன்னதும் தன்னை நேரில் அழைத்து விசாரித்ததாக சங்கீதா குற்றம்சாட்டி உள்ளார். இப்படி டப்பிங் யூனியன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன் வைக்கட்டு வருவதால் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் ராதா ரவிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்... 4 வயசுல அந்த ரகசியம் தெரிஞ்சதும் கமல் துடிச்சு போயிட்டான்! மறக்க முடியாத நாள்.. பற்றி பேசிய சாருஹாசன்!

click me!