நிலத்தின் உரிமையாளர் யார்? கூகுள் மேப் மூலம் ஈசியா கண்டுபிடிக்கலாம்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

By SG BalanFirst Published May 4, 2024, 11:34 PM IST
Highlights

நிலத்தின் சர்வே எண் வேண்டும். சர்வே எண்களை அரசே இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நிலம் அல்லது வீடு யாருடையது என்பதை எளியதாக அறிய முடியும். கூகுள் மேப் மூலம் இதை அனைவரும் தெரிந்துகொள்ளலாம். 

எந்த நிலத்திற்கும் உரிமையாளர் யார் என்பதை கூகுள் மேப் மூலம் எளிதாக கண்டுபிடிக்கும் வசதி இருப்பது உங்களுக்குத் தெரியுமா? நிலத்தின் உரிமையாளர் யார் என்று அறிய வேண்டும் என்றால், நிலத்தின் சர்வே எண் வேண்டும். சர்வே எண்களை அரசே இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு நிலம் அல்லது வீடு யாருடையது என்பதை எளியதாக அறிய முடியும். கூகுள் மேப் மூலம் இதை அனைவரும் தெரிந்துகொள்ளலாம். எந்த இடத்தின் விவரத்தை அறிய வேண்டுமோ அந்த இடத்திற்குச் சென்று மொபைலில் கூகுள் மேப் செயலியைத் திறந்து சாட்டிலைட் வியூ ஆப்சனை தேர்வு செய்யவும்.

நீங்கள் இருக்கும் இடத்தை ஜூம் செய்து அதை ஒரு ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு https://tngis.tn.gov.in/apps/village_dashboard/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும். இது தமிழ்நாடு அரசு நடத்தும் அதிகாரபூர்வ இணையதளம். இந்தத் தளத்திற்குச் சென்று நிலம் இருக்கும் மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றை அடுத்தடுத்து தேர்வு செய்யவும்.

டெஸ்லாவை காப்பி அடிக்கும் இந்திய நிறுவனம்... நிரந்தரத் தடை கோரி வழக்கு தொடர்ந்து எலான் மஸ்க்!

இப்போது இணையதளத்தில் உள்ள கூகுள் மேப்பில் நீங்கள் தேர்வு செய்த இடம் தோன்றும். குறிப்பிட்ட கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே நம்பர்களும் மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்டிருக்கும். இதை கூகுள் மேப்பில் எடுத்த ஸ்கிரீன்ஷாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் இருக்கும் இடத்தின் சர்வே நம்பரைத் தெரிந்துகொள்ளலாம்.

பிறகு https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற தமிழக அரசின் மற்றொரு இணையதளத்திறகுச் செல்லுங்கள். பட்டா சிட்டா விவரங்களை பார்வையிடும் பகுதிக்குச் செல்லுங்கள். மாவட்டம், வட்டம், கிராமம் எனத் தேர்வு செய்து, பட்டா எண், புல எண் எனக் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் புல எண்ணை டைப் செய்யுங்கள்.

பிறகு உட்பிரிவு எண்ணையும் டைப் செய்துவிட்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்சாவை (Captcha) கவனமா பார்த்து, சரியாக அதற்குரிய இடத்தில் டைப் செய்யுங்கள். பிறகு சமர்பி என்ற பட்டனை கிளிக் செய்தால், நீங்கள் பார்க்க விரும்பிய நிலத்தின் உரிமையாளர் யார் என்று தெரிந்துவிடும்.

அவதூறு பேச்சு வழக்கில் சவுக்கு சங்கருக்கு புதிய சிக்கல்! குண்டாஸ் வழக்கு போட பிளான்?

click me!