சவுக்கு சங்கருக்கு 14 நாள் நீதிமன்ற காவலை விதித்து உத்தரவிட்டுள்ளார் கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன்.
இன்று அதிகாலை தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை காவல்துறையினர் வழக்கு விஷயமாக கைது செய்தனர். அப்போது சவுக்கு சங்கர் உடன் இருந்த அவரது பணியாளர்கள் பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகியோர் மீது பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையில் சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது என இரண்டு பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கஞ்சா வைத்திருந்ததாகவும், சவுக்கு சங்கர் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?