Rashmika: திரிஷா, நயன்தாராவை ஓரங்கட்டிய ராஷ்மிகா.. புஷ்பா 2 முதல் குபேரா வரை கைவசம் இத்தனை பிரம்மாண்ட படங்களா?

First Published May 10, 2024, 10:37 AM IST

திரிஷா, நயன்தாராவை ஓரம்கட்டும் வகையில் கைவசம் அரை டஜன் படங்களுடன் செம்ம பிசியான நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் கைவசம் உள்ள படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Pushpa 2

புஷ்பா 2

சுகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. புஷ்பா 2 திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.

Kubera

குபேரா

நடிகை ராஷ்மிகா மந்தனா கைவசம் உள்ள மற்றொரு பான் இந்தியா படம் தான் குபேரா. இப்படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார ராஷ்மிகா மந்தனா. இப்படத்தில் நடிகர் நாகர்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Sikandar

சிக்கந்தர்

நடிகை ராஷ்மிகா அண்மையில் கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் சிக்கந்தர் திரைப்படம். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார். பாலிவுட்டில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராக உள்ள இப்படத்தில் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் ராஷ்மிகா மந்தனா. இப்படத்தின் ஷூட்டிங் ஒரிரு மாதத்தில் தொடங்க இருக்கிறது.

இதையும் படியுங்கள்... ஒருமுறை தற்கொலை செய்து கொள்ள நினைத்த ரஜினிகாந்த்.. அவரின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் எது தெரியுமா?

Chhava

சவ்வா

ராஷ்மிகா கைவசம் உள்ள மற்றுமொரு இந்தி படம் தான் சவ்வா. இப்படத்தில் விக்கி கெளசலுக்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா. சத்ரபதி சிவாஜியின் மகனான சத்ரபதி சம்பஜி மகாராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி வருகிறது. 

The Girlfriend

தி கேர்ள் பிரண்ட்

தெலுங்கில் ராஷ்மிகா மந்தா கைவசம் உள்ள படம் தான் தி கேர்ள் பிரண்ட். இப்படத்தை பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்க உள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 24-வது படமான இதில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஹேஷம் அந்துல் வஹாப் இசையமைக்கிறார்.

Rainbow

ரெயின்போ

சாந்தரூபன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ரெயின்போ. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்டு எடுக்கப்படும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஜோடியாக தேவ் மோகன் நடித்திருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது.

இதையும் படியுங்கள்... எழுத்துப் பிழையால் பறிபோன மமிதா பைஜுவின் ஒரிஜினல் பெயர்... அப்போ பிரேமலு நாயகியின் நிஜ பெயர் இதுவா?

click me!