ரோபோடிக் லுக்.. புத்தம் புது Processor.. இந்தியாவிற்கு வரும் Infinix GT 20 Pro - எப்போது? விலை & ஸ்பெக் இதோ!

By Ansgar R  |  First Published May 16, 2024, 5:52 PM IST

Infinix GT 20 Pro India launch : இந்தியாவில் விரைவில் தனது மிட் ரேஞ்சு பட்ஜெட் ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிட தயாராகியுள்ளது பிரபல Infinix நிறுவனம். அது குறித்து இந்த பதிவில் காணலாம்.


Infinix GT 20 Pro ஆனது வருகின்ற மே 21ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது மற்றும் இந்த புதிய மிட் ரேஞ்சு பட்ஜெட்டில் அறிமுகமாகும் 5G போனின் விலை ரூ. 25,000க்குள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இது Nothing Phone 2a, Poco X6 மற்றும் iQOO Z9 போன்ற பிரபலமான போன்களுடன் போட்டியிடும். 

Flipkart நிறுவனம் ஏற்கனவே இந்த Infinix போனின் இன் சமீபத்திய 5G தொலைபேசியின் பெரும்பாலான விவரக்குறிப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் இதே போன் கடந்த ஏப்ரல் மாதமே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், அது குறித்த பல தகவல்கள் இணையத்தில் உள்ளது என்றே கூறலாம். MediaTek Dimensity 8200 Ultimate SoC Processor கொண்ட இந்தியாவின் முதல் தொலைபேசி இதுவாகும். 

Tap to resize

Latest Videos

undefined

அசால்ட்டாக மடிக்கலாம்.. இத்தனை வருடம் வரைக்குமா..! விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 & ப்ரோ இந்தியாவுக்கு வருது..

Infinix GT 20 Pro ஒரு சிறந்த சைபர் மெச்சா வடிவமைப்புடன் வருகிறது. இது 8 வண்ண விருப்பங்கள் மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய பல்வேறு லைட்டிங் விளைவுகளுடன் LED பின்புறத்தை கொண்டுள்ளது. 108-மெகாபிக்சல் மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் 5,000mAh பேட்டரி இதில் உள்ளது. இது ஒரு பிரத்யேக X5 டர்போ கேமிங் சிப்பைக் கொண்டுள்ளது ஆகவே கேமிங் செய்பவர்களுக்கு இது சிறந்த போனாகும். 

Infinix GT 20 Pro 12GB வரை LPDDR5X ரேம் மற்றும் 256GB UFS 3.1 சேமிப்பகத்தால் ஆதரிக்கப்படும், இது தனது போட்டியாளர்களுடன் போட்டியிட வலுவான ஒன்றாக உள்ளது என்றே கூறலாம். 90FPS உயர் பிரேம் வீதம் மற்றும் SDR முதல் HDR போன்ற அம்சங்களுக்காக பிரத்யேகமான Pixelworks X5 Turbo டிஸ்ப்ளே கேமிங் சிப்பும் இதில் உள்ளது.

கூகுளின் புதிய விதிகள் மே 30 முதல் அமல்.. மொபைல் பயனாளர்களே இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..

click me!