Layoff : Toshiba எடுத்த அதிரடி முடிவு.. பணியில் இருந்து நீக்கப்படும் 4000 பேர் - என்ன காரணம் தெரியுமா?

By Ansgar R  |  First Published May 16, 2024, 5:35 PM IST

Toshiba Layoff : உலக அளவில் பிரபலமான Toshiba நிறுவனம், தன்னிடம் வேலை செய்யும் 4000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


புதிய உரிமையின் கீழ் குறிப்பிடத்தக்க மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக அதன் உள்நாட்டு பணியாளர்களில் 4,000 பேரை பணியில் இருந்து நீக்கவுள்ளதாக இன்று வியாழனன்று தோஷிபா நிறுவனம் அறிவித்ததாக பிரபல செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. தனியார் சமபங்கு நிறுவனமான ஜப்பான் இண்டஸ்ட்ரியல் பார்ட்னர்ஸ் (JIP) தலைமையிலான கூட்டமைப்பு $13 பில்லியனுக்கு கையகப்படுத்திய பின்னர் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த மறுசீரமைப்பு, தோஷிபாவின் உள்நாட்டு பணியாளர்களில் 6% குறைப்பைக் குறிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல் கூடுதலாக, தோஷிபா நிறுவனம் அதன் அலுவலக செயல்பாடுகளை மத்திய டோக்கியோவில் இருந்து கவாசாகிக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது, எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் 10% செயல்பாட்டு லாப வரம்பை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது அந்நிறுவனம்.

Latest Videos

undefined

ரூபே கார்டில் சூப்பர் ஆஃபர்! வெளிநாடுகளில் பணம் செலுத்தினால் 25% கேஷ்பேக்!

தோஷிபாவை புத்துயிர் பெற செய்வதற்கான கூட்டமைப்பின் முயற்சிகள் ஜப்பானில் தனியார் சமபங்குக்கான சோதனையாக உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன, அங்கு அத்தகைய நிறுவனங்கள் ஒரு காலத்தில் "ஹகேடகா" அல்லது அவற்றின் ஆக்ரோஷமான தந்திரோபாயங்களுக்காக விமர்சிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், தனியார் சமபங்கு படிப்படியாக ஜப்பானின் பழமைவாத வணிக கலாச்சாரத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, குறிப்பாக முக்கிய அல்லாத சொத்துக்களை விலக்க விரும்பும் அல்லது வாரிசு சவால்களை எதிர்கொள்ளும் நிறுவனங்களுக்கு இது ஒரு முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தோஷிபா போல ஃபோட்டோகாப்பியர் உற்பத்தியாளர் கொனிகா மினோல்டா, அழகுசாதன நிறுவனமான ஷிசிடோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஓம்ரான் உட்பட பல ஜப்பானிய நிறுவனங்கள் சமீபத்தில் தங்கள் பணியாளர்களில் சிலர் பணிநீக்கம் செய்தது நினைவுகூரத்தக்கது. இது பல்வேறு தொழில்களில் பெருநிறுவன மறுசீரமைப்பின் பரந்த போக்கை பிரதிபலிக்கிறது என்று தான் கூறவேண்டும்.

பணம் எடுக்க இனி ஏடிஎம்முக்கு செல்ல வேண்டியதில்லை.. வீட்டில் இருந்தே பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

click me!