சிஏஏ சட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இந்திய குடியுரிமை சான்றிதழ்களை வழங்கிய மத்திய அரசு!

By Manikanda Prabu  |  First Published May 16, 2024, 6:12 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இந்திய குடியுரிமை சான்றிதழ்களை மத்திய அரசு வழங்கியுள்ளது


குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதனை ஆளும் பாஜக அரசு சட்டமாக்கியுள்ளது. அதன்படி, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு அந்த மூன்று நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவது, இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அகதிகள் இடம்பெறாதது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது. இந்த சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Latest Videos

undefined

நீதிமன்ற அனுமதியின்றி அமலாக்கத்துறை யாரையும் கைது செய்யக்கூடாது - உச்ச நீதிமன்றம் -அதிரடி!

இதனிடையே, குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதியன்று மத்திய அரசு அறிவிப்பானை வெளியிட்டது. சிஏஏ சட்டத்திற்கான விதிமுறைகளும் வெளியிடப்பட்டன. கடந்த 2019ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்ட நிலையில், 4 ஆண்டுகள் கடந்து திடீரென சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

ஆனால், சிஏஏ சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இந்திய குடியுரிமை சான்றிதழ்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ள நிலையில், முதற்கட்டமாக 300 பேருக்கு சிஏஏ சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை சான்றிதழ்களை மத்திய பாஜக அரசு வழங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை குறிக்கும் வகையில், 14 பேருக்கு டெல்லியில் நடைபெற்ற விழாவில் சான்றுதழ்களை மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா வழங்கினார்.

சிஏஏ சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். முன்னதாக, சிஏஏ சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்க பிரத்யேகமாக இணையதளம் தொடங்கப்பட்டது. அதில், 25,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த விண்ணப்பங்கள் மூன்று நிலைகளில் பல்வேறு கட்டங்களாக பரிசீலிக்கப்பட்டு முதற்கட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சான்றிதழ்களை பெற்றுள்ள பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

click me!