Priyanka Mohan: குறுகிய காலகட்டத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்...படு குஷியில் உள்ளாராம்..

First Published Jun 5, 2022, 9:48 AM IST

Priyanka Mohan: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார், நடிகர் மகேஷ் பாபு நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகன் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.

priyanka-mohan

வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பிரியங்கா மோகன், குறுகிய காலகட்டத்திலேயே தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு  வெளியான  "ஒந்து கதை ஹெல" என்ற கன்னட படத்தின் மூலம் தனது முதல் திரைப்பயணத்தை துவக்கினார்.

priyanka-mohan

தெலுங்கி திரையுலகில், சூப்பர் ஹிட் நாயகியாக வலம் வந்த இவர், சிவகார்த்திகேயனின் பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படமான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன்.

priyanka-mohan

இந்த திரைப்படத்தில் இவருக்கு நல்ல பெயர் கிடைக்க, பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக  எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். இதன்பின்னர், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகன், அவருடன் டான் படத்தில் நடித்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்ததன் காரணமாக முன்னணி நடிகையாக உயர்ந்தார் பிரியங்கா மோகன்.

priyanka-mohan

நடிகை பிரியங்கா மோகனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதன்படி தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள பிரியங்கா மோகன். இதன்பின், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 169 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.

priyanka-mohan

இந்நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார், நடிகர் மகேஷ் பாபு நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகன் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மேலும் படிக்க ....Keerthy suresh: நான் நடிச்ச படங்களை தானே பார்க்காத கீர்த்தி சுரேஷ்.... பேட்டியில் பகிர்ந்த ஷாக்கிங் தகவல்...

click me!