டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெறும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது வரும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, ஓமன், கனடா, பப்புவா நியூ கினியா, தென் ஆப்பிரிக்கா, உகாண்டா, நியூசிலாந்து, நமீபியா, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, நேபாள், நெதர்லாந்து ஆகிய 20 அணிகள் இடம் பெற்றன.
முதல் கட்டமாக இந்த தொடரில் பங்கேற்கும் கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது 2ஆவது அணியாக பிசிசிஐ 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. இதில், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள்:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
மாற்று வீரர்கள்: சுப்மன் கில், ரிங்க் சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான்.
15 பேர் கொண்ட இந்திய அணியில் சில மாற்றங்களும் செய்யப்பட இருக்கிறது. உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் அதில் மாற்றங்கள் செய்ய ஒரு முறை வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
🚨India’s squad for ICC Men’s T20 World Cup 2024 announced 🚨
Let's get ready to cheer for pic.twitter.com/jIxsYeJkYW