ரூ.1100 கோடி.. சர்வதேச தரத்தில் மாற்றப்பட்ட திருச்சி விமான முனையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!!

First Published Jan 2, 2024, 9:49 AM IST

ரூ.1.100 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் மாற்றப்பட்டுள்ள திருச்சி விமான முனையத்தை இன்று திறந்து வைக்க உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, அந்த விழாவிலேயே பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைக்கவும் உள்ளார்.

மத்திய அரசின் சார்பில் தொடங்க உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். ரயில்வே, மற்றும் சாலை திட்ட பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

ரூ.1,100 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச முனையக் கட்டிடம் ஆண்டுக்கு 44 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை செய்யும் திறன் கொண்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பதால் தலைவர்களை வரவேற்க பாஜக மற்றும் திமுகவினர் தங்கள் கட்சிக் கொடிகளை வழிநெடுக கட்டியுள்ளனர்.

இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..

click me!