2ஆவது இடத்திற்கு செல்லுமா சன்ரைசர்ஸ்? – டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!

By Rsiva kumar  |  First Published May 19, 2024, 3:48 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 69ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஜித்தேஷ் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.


ஹைதராபாத்தில் நடைபெறும் 69ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஜித்தேஷ் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்த சீசனில் இதுவரையில் விளையாடிய 13 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் 5 வெற்றி, 8 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்துள்ளது. அதோடு, 2ஆவது அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.

இதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 13 போட்டிகளில் விளையாடி 7ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. அதோடு, 3ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் 2ஆவது இடம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

undefined

தோனி அடிச்ச சிக்ஸ் மைதானத்தை விட்டு வெளியில் போனது – நியூ பந்தால் ஆர்சிபி வெற்றி பெற்றது – தினேஷ் கார்த்திக்!

பஞ்சாப் அணியில் ரிஷி தவான், அதர்வா டைடு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், அர்ஷ்தீப் சிங்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் அணியில் ராகுல் திரிபாதி அணியில் இடம் பெற்றுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 66ஆவது லீக் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் கிங்ஸ்:

பிராப்சிம்ரன் சிங், அதர்வா டைடு, ரிலீ ரோஸோவ், ஷஷாங்க் சிங், ஜித்தேஷ் சர்மா (கேப்டன், விக்கெட் கீப்பர்), அஷுதோஷ் சர்மா, ஷிவம் சிங், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, சன்வீர் சிங், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், விஜயகாந்த் வியாஷ்காந்த், டி நடராஜன்.

ஜியோ சினிமாவில் 50 கோடி பார்வையாளர்களை கடந்து RCB vs CSK போட்டி சாதனை!

இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 22 போட்டிகளில் ஹைதராபாத் 15 போட்டியிலும், பஞ்சாப் கிங்ஸ் 7 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த ராஜீவ் காந்தி மைதானத்தில் இரு அணிகளும் மோதிய 8 போட்டிகளில் ஹைதராபாத் 7 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய 56 போட்டிகளில் 34ல் வெற்றியும், 21ல் தோல்வியும் அடைந்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்று 2ஆவது இடத்த்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 முறை சாம்பியன் – 12 முறை பிளே ஆஃப் – 3ஆவது முறையாக பிளே ஆஃப் இல்லாமல் பரிதாபமாக வெளியேறிய சிஎஸ்கே!

 

சாதிக்க காத்திருக்கும் வீரர்கள்:

ஹென்ரிச் கிளாசென் (49), இன்னும் ஒரு பவுண்டரி அடித்தால் 50 பவுண்டரி அடித்த வீரராவார்.

ஜித்தேஷ் சர்மா (2458) ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்கள் எடுத்த வீரராக சாதனை படைப்பார்.

click me!