மிரட்டும் கோடை மழை! இடி, மின்னல் வரும்போது என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது?

First Published | May 19, 2024, 3:37 PM IST

Thunder and lightning precautions: கோடை காலத்தில் மழை பெய்யும்போது பயங்கரமான இடி, மின்னல் ஏற்படும். அப்போது பொதுமக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்வது எப்படி என்ற வழிகாட்டுதல்களை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது.

thunder lightning protection device

வெளியிடங்களில் இருக்கும்போது இடி இடிக்கும் சத்தம் கேட்டால், மின்னல் வெட்டுவது தெரிந்தால் உடனனே வீட்டிற்குள் செல்ல வேண்டும். வீட்டை விட்டு வெளியே வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். வீட்டின் கதவு, ஜன்னல்களையும் உடனடியாக மூட வேண்டும்.

thunder and lightning precautions

குழந்தைகள் இருந்தால் விளையாடுவதற்கோ வேறு காரணங்களுக்காவோ வெளியே அனுமதிக்கக் கூடாது. ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவற்றை பாதுகாப்பான இடத்திற்குள் அடைக்க வேண்டும்.

Latest Videos


thunder strom

இடிச்சத்தம் கேட்டவுடன் டிவியை ஆஃப் செய்து, மின்சார இணைப்பைத் துண்டிக்க வேண்டும். மொபைல் போன்ற மின் சாதனங்களை சார்ஜிங் செய்வதையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

Summer rain thunder and lightning

இடி, மின்னல் ஏற்படும்போது மெட்டல் கூரைக்குக் கீழ் இருக்கக் கூடாது. இடி மின்னல்கள் மரங்களில் நேரடியாக தாக்கி தீப்பிடிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, மரத்தடியில் நிற்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

lightning effect precautions

இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருக்கும்போது இடி இடிக்கத் தொடங்கிவிட்டால், உடனடியாக அருகில் உள்ள ஒரு பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும். இடி இடிப்பது நின்று சிறிது நேரம் கிழித்துப் புறப்படலாம்.

thunder storm precautions

இதேபோல நீர்நிலைகளில் குளித்துக்கொண்டிருந்தாலோ படகு சவாரியில் இருந்தாலோ உடனடியாகக் கரைக்குத் திரும்ப வேண்டும். நீர்நிலைகளில் மின்னல் தாக்கினால் பெரிய அசம்பாவிதம் ஏற்படக்கூடும்.

Thonder precautions

இடி மின்னலுடன் கனமழையும் பெய்துகொண்டிருந்தால், தாழ்வான பகுதிகளில் இருக்கவே கூடாது. உடனே அருகில் உள்ள மேடான பகுதிக்குச் சென்றுவிட வேண்டும். தொடர்ந்து பலத்த இடிச்சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும்போது குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, ஷவரில் குளிக்கவே கூடாது.

Lightning precautions

சமையலறை போன்ற தீப்பற்றும் வாய்ப்பு உள்ள இடங்களில் இருப்பதே கூடாது. ஒருவருக்கு இடி மற்றும் மின்னல் தாக்கினால் முதலுதவி செய்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். 

click me!