Ajith: கடைசி நேரத்தில் முட்டிக்கிச்சு! அஜித் நடிக்க வேண்டிய ஹிட் பட வாய்ப்பை தட்டி தூக்கிய நடிகர் பிரஷாந்த்.!

First Published Apr 30, 2024, 12:23 PM IST

அஜித்துடன் கடைசி நேரத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, பிரஷாந்தை வைத்து படம் இயக்கியதாக பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி கூறியுள்ளார்.
 

இயக்குனர் பிரியதர்ஷனிடம் துணை இயக்குனராக இருந்து, பின்னர் இயக்குனராக மாறியவர் பிரவீன் காந்தி. இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு KT குஞ்சுமோன் தயாரிப்பில், நாகார்ஜுனா மற்றும் சுஷ்மிதாசன் ஹீரோ - ஹீரோயினாக நடித்த, 'ரட்சகன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரின் முதல் படமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

இதைத்தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு, நடிகர் பிரசாந்த் நடித்த ஜோடி படத்தை இயக்கினார். இப்படம்  நூறு நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. மேலும் நடிகர் பிரஷாந்துக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது. இந்த படத்தில் பிரசாத்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்த நிலையில், திரிஷா சிம்ரனின் தோழியாக ஒரே ஒரு சீனில் மட்டுமே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aijith Kumar : கோலிவுட் உலகின் Self Made ஹீரோ.. AKயின் வியக்க வைக்கும் டாப் 10 கார் மற்றும் பைக் கலெக்ஷன்!
 

இந்த படத்தைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் தான் 'ஸ்டார்'. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தில் நடிகர் பிரஷாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆனவர் அஜித் தானாம். இந்த தகவலை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பிரவீன் காந்தி கூறியுள்ளார்.  

அபூர்வம் என இப்படத்திற்கு தலைப்பிட பட்டதாகவும், அஜித்தின் திருமணத்தை முன்னிட்டு சுமார் 20 படங்களில் வாழ்த்து போஸ்டர் பேப்பரில் வெளியான போது, இப்படத்தின் டைட்டிலோடு அஜித்துக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதாகவும், பின்னர் தனக்கும் அஜித்துக்கும் ஏற்பட்ட ஒரு சிறு பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து அஜித் விலகி விட்டதாகவும்... இதை தொடர்ந்து இந்த படத்தின் வாய்ப்பு பிரசாத்துக்கு சென்றதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்திற்காக சுமார் ஆறு மாதங்கள் அஜித்துடன் பயணித்த தகவலையும் பிரவீன் காந்தி கூறியுள்ளார்.

Jovika: நடிகையாகும் முன்பே கவர்ச்சியில் இறங்கிய வனிதா மகள்! குட்டை உடையில் சிங்கப்பூரில் சிறகடிக்கும் ஜோவிகா!

ஸ்டார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தை தொடர்ந்து பிரவீன் காந்தி  2007 ஆம் ஆண்டு துள்ளல் என்கிற படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதைத்தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு புலி பார்வை என்கிற படத்தை ஈழத் தமிழர்களை மையமாக வைத்து இயக்கியிருந்தார். இப்படமும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதுவே அவர் இயக்கிய கடைசி படமாகும். கூடிய விரைவில் தரமான கதையோடு பிரவீன் காந்தி கம் பேக் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!