Britney: திருமணத்திற்கு முன்பே கருவிலேயே இறந்த குழந்தை...மனம் உடைந்த பிரபல பாடகி..ஆறுதல் கூறிய மூன்றாவது கணவர்

First Published May 15, 2022, 2:39 PM IST

Britney Spears Pop Singer: பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், மூன்றாவது கணவரின் குழந்தை கருவிலேயே சிதைந்து விட்டதாக தற்போது மனம் உடைந்து சோகமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்

britney-spears

40 வயதாகும் பிரபல ஹாலிவுட் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், கடந்த 2017ம் ஆண்டு முதல் தன்னைவிட இளம் வயது நபரை காதலித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி, வயதுக்கு வந்த இரு மகன்கள் உள்ளனர்.

britney-spears

ஸ்பியர்ஸ் தனது இரண்டு கணவர்களான கெவின் ஃபெடர்லைன் மற்றும் ஜேஸன் ஆலன் அலெக்ஸாண்டர் ஆகியோரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடக்கத்தக்கது . 

britney-spears

இதையடுத்து, மூன்றாவதாக சாம் அஸ்காரி என்பவரை, காதலித்து வரும் பிரிட்னி ஸ்பியர்ஸ்,  கடந்த ஆண்டு இருவரும் நிச்சயம் செய்து கொண்டனர். இதையடுத்து, விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

britney-spears

இந்நிலையில், பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் திருமணத்துக்கு முன்பாகவே, வருங்கால கணவர் சாம் அஸ்காரியின் குழந்தையை தான் வயிற்றில் சுமந்து வருவதாக, சமீபத்தில் இணையத்தில் பகிர்ந்து கொண்டார்.   

britney-spears

இந்நிலையில், தற்போது பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  குழந்தை கருவிலேயே சிதைந்து போனதாக சோகமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். 

Britney Spears

இதையடுத்து, அவரின் மூன்றாவது கணவரா சாம் அஸ்காரி கவலைப்படாதே..விரைவிலேயே அடுத்த குழந்தை ரெடி ஆகிவிடும், அதன் பிறகு நாம் மகிழ்ச்சியாக இருப்போம்  என்று பதிவு ஒன்றை போட்டு ஆறுதல் கூறியுள்ளார். இந்த செய்தி அறிந்த பிரிட்னி ஸ்பியர்ஸ் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு கீழ் ஆறுதல் கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க....Chiyaan 61: விஜய்க்காக உருவாக்கப்பட்ட ஹாலிவுட் ஸ்டைல் கதை..தட்டிப்பறித்த விக்ரம்?ஓப்பனாக சொன்ன பிரபல இயக்குநர்..

click me!