Exam Time-ல குழந்தைக்கு என்ன மாதியான உணவுகளை கொடுக்கலாம்..? உங்களுக்கான சில யோசனைகள் இதோ!

First Published Mar 13, 2024, 1:50 PM IST

தேர்வு சமயத்தில் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்று பார்க்கலாம்...

தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் பொது தேர்வு என்றால் சொல்லவே வேண்டாம், அவர்கள் அதுகுறித்து மேலும் மேலும் பயப்படுகிறார்கள். இதனால் அவர்கள் உணவைச் சரியாகச் சாப்பிடுவதில்லை. எனவே, இந்த மாதிரியான நேரத்தில், அவர்கள்  படித்ததெல்லாம் நினைவில் இருக்கவும், தேர்வுகளை நன்றாக எழுதவும், அவர்களின் டென்ஷன் குறையவும் பெற்றோரின் கையில்தான் உள்ளது. 

ஆம்.. தேர்வு சமயத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கீழ்கண்ட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும். அது என்ன மாதிரியான உணவுகள் என்று இப்போது பார்ப்போம் வாருங்கள்.

கொழுப்பு நிறைந்த மீன்: மீன் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே, இதை குழந்தைகளுக்கு தவறாமல் கொடுங்கள். அதுவும். 
பரீட்சையின் போது இதை கொடுப்பது மிகவும் அவசியம். ஏனெனில், இவற்றில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய உதவுகிறது. ஆக.. இந்த உணவை வைப்பதன் மூலம் அவர்கள் படித்ததை நினைவில் வைத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

ப்ளூ பெர்ரி: ப்ளூ பெர்ரிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக ஃபிளாவனாய்டுகள் உள்ளன். இவைகள் குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும். எனவே, இதை தினமும் சாப்பிட கொடுங்கள்.

ப்ரோக்கோலி: ஆரோக்கியமான உணவுகளில் ப்ராக்கோலியும் ஒன்று. இவற்றில் குளுக்கோசயனேட்டுகள் நிறைந்துள்ளன. இவை மூளையை சுறுசுறுப்பாக வேலை செய்ய உதவுகிறது. ப்ரோக்கோலி சாப்பிட்டால் மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். குழந்தைகளும் படிப்பில் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

இதையும் படிங்க:  உங்கள் குழந்தை ஒரு ‘ஜீனியஸ்’ என்பதை குறிக்கும் அறிகுறிகள் இவை தான்.. பெற்றோர்கள் செக் பண்ணுங்க..

பூசணி விதைகள்: உங்கள் குழந்தையின் உணவில் பூசணி விதைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவற்றில் மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய உதவுகிறது.

இதையும் படிங்க: உங்கள் குழந்தைகளின் IQ-ஐ மேம்படுத்த வேண்டுமா? அப்ப இந்த ஜப்பானிய டிப்ஸை ட்ரை பண்ணுங்க..

டார்க் சாக்லேட்:  சாக்லேட் பிடிக்காத குழந்தை இல்லை. ஆனால், சாதாரண சாக்லேட்டுக்கு பதிலாக குழந்தைகளுக்கு டார்க் சாக்லேட் கொடுங்கள். ஏனெனி, இதில் ஃபிளாவனாய்டுகள், காஃபின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை குழந்தைகள் நன்றாகப் படிக்க உதவுகிறது.

நட்ஸ்கள்: நட்ஸ் குழந்தைகளுக்கு தினமும் கொடுங்கள். குறிப்பாக பரீட்சையின் போது கண்டிப்பாக கொடுங்கள். ஏனெனில், இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. இவை மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய உதவுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

முட்டை: முட்டையுல், மூளையின் ஆரோக்கியத்திற்கு தேவையான பெரும்பாலான சத்துக்கள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக வைட்டமின் பி6, பி12 மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. எனவே, குழந்தைகளின் உணவில் தினமும் முட்டையை சேர்த்துக்கொண்டால், 
அவர்களின் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை மூளை செல்களை செயல்படுத்துவதற்கும் சிறந்த செயல்திறனை மேம்படுத்துவதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.

click me!